நினைவுப்படுக்கை

எழுதி வைத்த கவிதைகளில்,
எங்கோ எப்போதோ படித்த கவிதையின் தடம்
சிறிதேனும் புலப்படத்தான் செய்கிறது..
வார்த்தைகளை மாற்றினாலும்,
வரிசைகளை மாற்றினாலும்,
ஏன்
வரிகளையே மாற்றினாலும்
வாலியின் குறும்பையும்,கண்ணதாசனின் புன்சிரிப்பையும்
கடக்கத்தான் வேண்டிருக்கிறது..
எங்கு சென்று என்னை தேட..!!
உன்னில் மனம் தொலைத்ததால்,உன்னிடமே
நான் மூர்க்கம் கொண்டேன்..
வேட்டையின் விளைவாய்,
வீடு பெற்று நீ கொணர்ந்த நம் மகனை
நான் படைத்த கவிதை என்றேன்..
பேரனை பார்க்க வந்த
என் தாய் உரைத்துவிட்டு போகிறாள்,
"அப்படியே உன் தாத்தா சாயல்டா " என..!!

எழுதியவர் : கல்கிஷ் (8-May-16, 11:42 am)
பார்வை : 450

மேலே