விவசாயி

கதிரவன் எழும்
வேளையில் எழுந்து
அலைகளாய் ஓயாமல்
அலைந்து திரிந்து
மாடுகளை கொண்டு
நிலத்தை உழுந்து
தன் செவ்வாயால்
பாடிக் கொண்டு
தன் காலை
சேற்றில் ஊன்றி
பயிர் நடுவதற்காக
களமிறங்கும் விவசாயிகள்
அரும்பாடு பட்டுக்
கொண்டிருக்கிறார்கள்.
நமக்காக!
நம் குடும்பத்திற்காக!
பயிர்களை பிடித்து நடுவதற்கு
அனைவருக்கும் வாய்ப்பு
கிட்டவில்லை.
இதை யாரும்
அறிந்து கொள்ள
முயலுவதுமில்லை.
முயலுங்கள்! அனைவரும்.
அவர்கள் படும்
துன்பத்தினை புரிந்து கொள்வதற்காக...
அவர்கள் நமக்கு
செய்த நன்றிக்காக...

எழுதியவர் : ப.தவச்செல்வன் (9-May-16, 4:14 pm)
Tanglish : vivasaayi
பார்வை : 73

மேலே