புதியதோர் உலகம் செய்வோம்

உலகமே பாராயோ!
உன் பள்ளங்களில் பலிகள் நிரம்புவதை
உன் மேடுகளில் உண்மை புதைக்கப்பட்டதை

பொய்களின் பொதிகளினால்
உன் கண்கள் மறைக்கப்படலாம்
உன் செவியை திறந்து கேள்
உன் செழிப்பை சொல்கிறேன் கேள்

துன்பங்கள் தூவானமாய் தூவுகிறதிங்கே...
தொப்புள்கொடி அறுந்தவுடன்
தூக்கியெறியும் சில தாய்மையிங்கே...

விருப்பங்களை விற்ற விலைமகள்கள் இங்கே
விஞ்ஞான வளர்ச்சி விஷமியாய் ஆனதிங்கே

ஏழைகளின் ஏக்கத்தில்
பணக்காரனின் பகட்டு இங்கே
உன் தவப்புதல்வர்களால்
பல நிர்பயாக்கள் இங்கே

எட்டுத்திக்கும் எல்லைக்கோடுகள் இங்கே
ஏவுகணையோடு எதிரிகள் இங்கே

இனியும் காண
இங்கு இன்பங்கள் ஏதுமில்லை
மரத்து போய்விட்ட
உன் மனதிடம் சொல்லிவிடு

மனிதாபிமானம் மறந்து போன
மனிதர்கள் கண்ணில் படாமல்
மறுகிரகம் செல்கிறேன்

வக்கிரகாரர்களின்
வன்கொடுமையில் சிக்காமல் சென்றுவிடுகிறேன் மன்னித்துவிடு

புவியின் புதிர் வாழ்க்கை புரியாது
மனிதராய் வாழும் மனிதர்காள்!
என்னோடு வாரும்
இவ்வுலகில் வாழ
நமக்கு தகுதியில்லை இடமுமில்லை
புதியதோர் உலகம் செய்வோம்

உண்மை ஊமை ஆகாத
ஊழலினால் உரிமை பறிப்போகாத
புதியதோர் உலகம் செய்வோம்...

எழுதியவர் : வீ. சீதளாதேவி (10-May-16, 5:42 pm)
பார்வை : 210

மேலே