புதியதோர் உலகம் செய்வோம் -போட்டிக்கவிதை

பிறக்கின்ற ஒவ்வொரு குழந்தையும்
கூவுகின்ற பெட்டிக்கோ
குத்துப்பாட்டுக்கோ
குடைச்சல் தரும் செல்போன்களுக்கோ
பிறந்தவுடன் பேசி முடிக்கும் சம்மந்ததிற்கோ இரையாகாமல் தப்பித்துக்
குழந்தை குழந்தையாகவே வளர..

புதியதோர் உலகம் செய்வோம்.

படிக்கின்ற மாணவர்களுக்கு
புத்தகப்பை உலகமாகாமல்
உலகம் புத்தப்பையாக மாறவும்

இளைஞர்கள் அனைவரும் சிறந்தவர்களாக
சமூக வளைதளங்களில் மட்டுமில்லாமல்
சமூகத்திலும் செயலாற்றவும்
வித்தியாச சிந்தனைகளோடு அவர்கள்
விடுதலையாகி சுதந்திர வானில் பறந்திடவும்

புதியதோர் உலகம் செய்வோம்

குழந்தைகளில்லா தாய்மார்களும்
தாயில்லா குழந்தைகளும்
அசை போடும் மாடுகளின்
வசைப்பாட்டிலிருந்து தப்பிக்கவும்

மாற்றுத்திறனாளிகளை உற்றுப்பார்க்கும் நிலை மாறவும்

புதியதோர் உலகம் செய்வோம்

தினந்தோறும் படிக்கின்ற செய்திகள்
கத்திகளால் எழுதப்படாமல்
புத்திக்கொண்டு பேனாக்களால் எழுதபடவும்

அரசியல் வெறும் பேச்சாக இல்லாமல் செயல் அரசியலாக
மாறவும்
அரசியல்வாதிகள் மக்கள்வாதிகளாக மாறவும்

புதியதோர் உலகம் செய்வோம்

திரைபடங்கள் பார்க்கையில்
பார்ப்பவரின் சட்டையில்
ரத்தமும் சதையும் தெறிக்காமலிருக்கவும்

பொது இடங்களில் பெண்களின் ஆடை விலகி
அங்கம் தெரிய காத்திருக்கும்
நிர்வாண மனதுடையோர்கள்
மறைந்து போகவும்

புதியதோர் உலகம் செய்வோம்

சாதிக்கென சான்றிதழ் இல்லாமல் போகவும்
சமத்துவம் எண்ணத்திலும் எழுத்திலும் நிலைத்து வாழவும்

முதியோருக்கும்
ஆதரவற்றோருக்கும்
தனியாக இல்லங்கள் இல்லாமல் போகவும்..

புதியதோர் உலகம் செய்வோம்

-அரவிந்த்

எழுதியவர் : Aravinth KP (10-May-16, 10:32 pm)
பார்வை : 256

மேலே