உனக்காக மட்டும் துடிக்குதடி என் இதயம் 555

என்னுயிரே...

அன்று என்னை நீ ஒரு
மழலையைபோல்...

என் கரம் பிடித்து
அழைத்து சென்றாயே...

அதற்க்காவே காத்து இருக்குதடி
என் கைகள் இன்று...

நான் எதிர்பார்க்காத
நேரத்தில்...

என் கன்னத்தில்
கொடுத்தாயே முத்தம்...

மீண்டும் கிடைக்குமா என்று
ஏங்குதடி என் கன்னங்கள்...

நீ அசைந்துவரும்
உன் நடை அழகை காண...

என் விழிகள் உன் திசையை
நோக்கி காத்திருக்குதடி...

நீ கொஞ்சி பேசுவதை கேட்க
என் செவிகள் இரண்டும் தவமிருக்குதடி...

உனக்காக மட்டும் உயிர்வாழ
துடிக்குதடி என் இதயம்...

என் உடல் நரம்புகள் கூட
உனக்காக செயல்பட்டு
கொண்டு இருகின்றன...

எனக்காக துடிக்க இந்த பூ உலகில்
யார் இருக்கிறார்...

உன்னைத்தவிர
என் பிரியமானவளே.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (11-May-16, 8:38 pm)
பார்வை : 134

மேலே