நயவஞ்சகன்

கூடவே இருப்பான் நண்பன் போல‌
குரல்வளை பிடிப்பான் வேலை ஆக‌
தேடினால் எங்கும் கிடைக்க மாட்டான்
அவனுக்கு தேவையெனில் காலில் கிடப்பான்

வெளிப்புற தோற்றத்தில் இவனும் தூய்மை
உட்புறம் முழுவதும் கணக்கில்லா கறுமை
நன்றியை யாருக்கோ விலை பேசியிருப்பான்
விசுவாசத்தை ஆழமாய் குழியில் புதைத்திருப்பான்

இவனை அடையாளம் காண்பது மிகஅரிது
இவன் பேசிடும் வார்த்தைகள் மிகஇனிது
உயிர்போன்ற தோழனின் உயிரைக் கொய்வான்
காட்டிக் கொடுத்துக்கூட காசுகள் செய்வான்

முன்னின்றால் எப்போதும் நல்லவன் இவனே
பிண்ணனியில் இவன்செய்வான் துரோகம் தானே
பணத்திற்காய் எப்போதும் விலை போயிடுவான்
மனம்முழுதும் நிரப்பிமிக விஷம் வைத்திருப்பான்

முடிந்தவரை இவனைக்கண்டு திருத்துவது நல்லது
முடியாவிட்டால் இவனைவிட்டே விலகுவது நல்லது
முடிவிவனுக்கு நிச்சயமாய் நரகம் தானே
முடிவுவரைக்கும் இவன்உலகத்தின் கரும்புள்ளி தானே...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (12-May-16, 7:47 pm)
Tanglish : nayavanjagan
பார்வை : 3680

மேலே