உழைப்பே உன்னதம்

உழைப்பவருக்கு மரியாதை
வீடு தேடி வந்திடுமே
உழைப்பவருக்கு உற்சாகம்
நித்தம் பணிவிடை செய்திடுமே
உழைப்பவருக்கு வாக்கிடவே
நன்மைகள் நாளும் நினைத்திடுமே
உழைப்பவருக்கு உதவிடவே
உடல்நலம் வரிசையில் நின்றிடுமே

உழைப்பவரே உலகத்தை
செதுக்க வந்த சிற்பியாவார்
உழைப்பவரே ஊருக்கு
நல்லது செய்யும் புத்தனாவார்
உழைப்பவரே எந்நாளும்
உன்னத மான மனிதனாவார்
உழைப்பவரே இவ்வுலகை
வழி நடத்துகின்ற தலைவனாவார்

உழைத்துப்பார்த்தால் துன்பமில்லை
உழைப்பின்றி கிடைப்பது இன்பமில்லை
உழைத்துப்பார்த்தால் தோல்வியில்லை
உழைப்பின்றி கிடைக்காது வெற்றிமாலை
உழைத்துப்பார்த்தால் வளம்வருமே
அதனால் வாழ்வில் நலம்வருமே
உழைத்துப்பார்த்தால் வெற்றிநிச்சயம்
உழைக்கவே அடைந்திடுவோம் நம்மலட்சியம்

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (12-May-16, 8:11 pm)
பார்வை : 950

மேலே