பயணம்

பயணம்
""""""""""""""
அடித்து, பிடித்து, அவசர
நெருக்கடிக்குள்,
பிரிவொன்று
பயணங்களில்
நிச்சயிக்கப்படுகிறது!
பல நிமிடங்கள்
காத்திருந்து சில
வினாடி விளிம்பில்
கண்களால்பேசி
வழிஅனுப்பி
வார்த்தைகள் கரகரக்க,
கண்ணீருடன் கைகாட்டி
ரயில் மறையும்வரை
பார்வையால் துரத்தி
தோற்றுப்போய்,
பெருமூச்சுவிட்டு!

இருக்கைகளை பிடித்த
செருக்கில்
நீட்டி, நிமிர்ந்து, சாய்ந்து,
நிம்மதியை
மனசு உணர நினைக்க!
அதை தள்ளிவிழுத்தி
நேற்றைய இனிய
சம்பவங்களை
ஞாபகங்கள் முட்டிமோதி
இழத்துவரும்!

காட்சிகளை அகல நிளப்படுத்தி
நினைவுகளில் படரவிட்டு
பிரிவுகளில் கண்கலங்கி
மௌனங்களில் நடந்தவற்றை
மீண்டும்! மீண்டும்!
அசைபோடும்
யன்னல் ஓர இருக்கை!

எப்போதுமே கேள்விகள்
இல்லாத பதிலுக்கு
தலையாட்டி பழக்கப்பட்டு!
விடுமுறைநாட்களின்
சுவாரஸ்யங்களில்
முழுசாக நநைந்து!
பிரியங்களுடன்
பார்த்து ,பேசி,
உறவுகளுடன் இணைந்த
பொழுதுகளை!
ஆழ்மனசுஅழுத்தமாக
பதிவுசெய்திருக்கும்!

விரும்பிய ஒவ்வொரு
தரிப்பிடத்திலும் அவரவர்
விருப்பமில்லாமல்
கனவுகளை கலைத்து!
பிரயாணபொதியுடனும்
கணத்த இதயத்துடனும்
நடைப்பிணமாக
பிரிந்து போவார்கள்!!!

லவன்
""''''''"''''''''''''

எழுதியவர் : லவன் (14-May-16, 10:16 am)
பார்வை : 134

மேலே