குறள் -383

தூங்காமை கல்வி துணிவுடைமை - இறைமாட்சி

குறள் - 383

தூங்காமை கல்வி துணிவுடைமை அம்மூன்றும்
நீங்கா நிலனாள் பவற்கு.

விளக்கம் :

செயல் ஆற்றுவதில் சோர்வு இல்லாமை, அனைத்தையும் அறியும் கல்வி, தீயவை எதிர்த்தாலும் நல்லன செய்வதற்கு ஏற்ற துணிவு இம்மூன்றும் நாட்டை ஆளுவோரை விட்டு விலகக்கூடாது.

இச்சூழலில் இம்மூன்றும் நம் நாட்டிலே இருக்கிறதா. .?

1.செயல் ஆற்றுவதில் சோர்வு இல்லாமை.

இதில் ஆளுமை வர்க்கத்தினருக்கு மக்கள் பணியில் "0"மதிப்பெண் தான்.
ஆனால் அதுவே அவர்களின் சொந்த பணிக்கு "200/100"மதிப்பெண் தரவேண்டும். இதே நிலை தான் அரசாங்கத்தின் பணியாளர்களுக்கும்.

இவர்களும் சோர்வில்லாமல் பணியாற்றுவார்கள் ஆனால் அதர்க்கு தக்க பணம் கொடுக்க வேண்டும். இவர்கள் சம்பளம் வாங்குவது இல்லையா என்று நாம் கேட்க கூடாது.
நாம் கொடுக்கும் பணத்தை அவர்கள் "அன்பளிப்பு "என்கிறார்கள். .ஆனால் உலகம் "ஊழல் "என்கிறது.

2.அணைத்தையும் அறியும் கல்வி

வள்ளுவர் எதை கல்வி என்று கூறினார் என்று தெரியவில்லை.
என்னை பொருத்தவரை இன்றைய கல்வி அனைத்தும்அறிய உதவாது.
அனுபவமே சிறந்த கல்வி.
அதுவே அணைத்தும் அறிய உதவும்.

இன்றைய எதார்த்த அரசியல் தலைமை. .தொண்டர். ....எத்தகைய "அருமையான " அனுபவ கல்வி என்ன என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

3.தீயவை எதிர்த்தாலும் நல்லன செய்வதற்கு ஏற்ற துணிவு...

நம் நாட்டிலே பெரும்பாலான தீமைகளை செய்வதே இந்த தலைமைகள் தான். ....!. ?

வள்ளுவர் கூறியது போல் இவையெல்லாம் ஒன்று கூடி ஒருவர் தலைவராக உயிர் பெற்றால். ..நம் மக்கள் அவரையும் தோர்கடிகிறார்கள்.
காமராஜர் தான் சிறந்த உதாரணம்.

வேறு யாராவது ஒருவேளை இருந்து வெற்றி பெற்றாலும் ஐந்து ஆண்டுகள் கூட வாய்ப்பு தர மாட்டார்கள். ..

எழுதியவர் : மோகன் சிவா (15-May-16, 12:31 am)
சேர்த்தது : மோகன் சிவா
பார்வை : 218

மேலே