காதல்

கண்ணை மூடினாலும்...

-பார்வை தெரியும்;

காதலித்துப் பார்...

அதன் அர்த்தம் உனக்கு புரியும்!


தவம் இருந்தாலும்...

-தூக்கம் வராது;

ஆனால்...

கனவு மட்டும்...

-கேட்க்காமலே வரும்!


வெயில்...

-சுட்டெரித்துக் கொண்டிருக்கும் ;

ஆனால்...

உனக்கு மட்டும்...

-இடி மின்னலுடன் மழை பொழியும்!

எந்த நாட்டில்...

-செய்த கண்ணாடி என்று தெரியவில்லை;

அதில்...

உன் முகத்தை பார்த்தால்....

-அவளின் முகம் தான் தெரியும்!


புத்தகம்...

-உனக்கு தொலைக்காட்சியாகும்;

ஆனால்...

அதில்...

-அவள் உருவம் மட்டும் ஒளிபரப்பாகும்!


உன் இதயத் துடிப்பே...

-நின்று விட்டதாய் தோன்றும்;

ஆனால்...

உனக்காக...

இன்னொரு இதயம்...

-அங்கு துடித்துக் கொண்டிருக்கும்!!!

எழுதியவர் : மகேஷ் குமார் (16-May-16, 11:38 pm)
Tanglish : kaadhal
பார்வை : 71

சிறந்த கவிதைகள்

மேலே