நட்பு

நட்பு
நான் விழும் போது
தாங்க வேண்டும்
நான் விழுவேனோ என
காத்திருக்க கூடாது

கழுகின் பார்வை
நட்புக்கு அழகு அல்ல
கருணையின் பார்வை தான்
நட்பு....

நீ
என் மீது கல் எறிந்ததில்
கவலை இல்லை
நேராக எறியவில்லையே
என்ற வருத்தம்...

நீ
கட்டபொம்மன்
என்ற நினைப்பு தான்..-ஆனால்
எட்டப்பன் சபை காரன்
ஆனது எப்போது ?

நட்பை சொன்னவன் நீ-
களங்கத்தை நீயா
எற்படுததுவது...
நான் வாலி இல்லை தான்
நீயாவது ராமனாக
இருந்திருக்கலாமே.....

நான் செய்த தவறு என்ன ?
உன்னில் என்னை கண்டதா?
உனக்கு கூட்டம் உண்டு
பதவி உண்டு
ஒன்றுமே இல்லாமல்
நிற்கும் நான் எப்படி
உன் போட்டியாளன் .....

காக்கையல்ல நான்
உன்னை சுற்றி
கரைந்து
காரியம் சாதிக்க ...
எச்சரிக்கை குருவி
உனக்காக கததினேன்
நீ என்னை வேட்டை
ஆடி விட்டாய்....

என் ஆனனந்தமே...
இன்பம் கொன்றுதான்
உனக்கு சந்தோசம் எனில்
மரிக்கிறேன் ...
நம் நட்பு
பொய் என்ற
பெயர் வேண்டாம் ....

தனி மரம் நான்
மரணம் அடைநதால்
ஒரு நிமிடம்
வந்து பார்
நீ சொன்ன
பழி பொய் என்று தெரியும்...

என் விழி
இன்னும் காத்து இருக்கும்
நீ ஒரு நிமிடம் மாவது
என்னை நினைப்பாய் என்று ....

அநாதை அவனை
கல் எறிந்ததில்
நானுமா என்று ....

நட்பு கண்ணகி போல
நீ எனக்கு கோவலன்
உனக்கு மாதவி இருப்பதில்
எனக்கு கவலை இல்லை
நான் கண்ணகிதான் ........

நாஞ்சில் இன்பா
9566274503

எழுதியவர் : நாஞ்சில் இன்பா (18-May-16, 8:51 am)
Tanglish : natpu
பார்வை : 389

மேலே