தினம் ஒரு காதல் தாலாட்டு தனிமை - 54 = 108

காதலுக்கு கண்ணில்லையே - என்னை
காதலிக்காத பெண்ணில்லையே….
காதலுக்கு பேதமில்லையே – ஆனால்
எனக்கு காதலிக்க நேரமில்லையே…

காதலுக்கும் பாடம் உண்டு - அதை
கசடற கற்க வேண்டும் நன்கு…!
காதலிலே பலவகை உண்டு – அதை
பழகிக் கொள்ள வேண்டும் நன்கு…!

ரோட்டுல பண்ணுற காதல்
ரோமியோ ஜீலியஸ் போல…
வீட்டுல பண்ணுற காதல்
லைலா மஜ்னு போல…

பீச்சுல பண்ணுற காதல்
சலீம் அனார்கலி போல..
பார்க்குல பண்ணுற காதல்
அம்பிகா அமரா போல…

கோட்டையில பண்ணுற காதல்
மும்தாஜ் ஷாஜகான் போல..
பார்ட்டியில் பண்ணுற காதல்
சார்லஸ் டயானா போல..

இன்னும் சொல்லிக் கொண்டேப் போகலாம்
உண்மை காதல் உயர்வைப் பற்றி…
ஒன்றைச் சொல்லி ஒன்றை விட்டாலும்
ஒண்ணும் நினைக்காதே என்னைப் பற்றி…!

காதலென்ற தேர்விலே கன்னிகளே முதலிடம்
கடற்கரை காதலிலே கவிதைகள் தாளமிடும்
காதலிலே தோல்வி கண்டால் கண்டபடி அலையாதே
கண்டவுடன் காதல்கொண்டு உன்னை நீ இழக்காதே..

காதலில்லா வாழ்க்கை யாருக்கும் அமையாது
காதலின்றி முனிவருக்கும் மோட்சம் கிட்டாது
காதலொரு அதிசய ஆகாய பறவை
அதனிடம் பழகிப்பார் அன்பாய் உறவை..!

குடைசாய்ந்த வண்டியாய் காதலை நினைக்காதே
படைகள் நீ வெல்ல காதலே ஊந்து சக்தி…
போனால் போகட்டும் என்று இருக்காதே
போராடும் குணத்தை என்றும் கைவிடாதே…

எழுதியவர் : சாய்மாறன் (18-May-16, 4:14 pm)
பார்வை : 82

மேலே