ஒரு வலிப் பாதை

என் இதயம்
பயணங்கள்
பதிவாகாத
ஒரு வலிப் பாதை!

நீ மட்டும் வசிக்க
விரும்பும்
என் தனிமை சூழ்
தரிசு நிலம்!

என் உள்ளம்
உன்
வருடலுக்கு ஏங்கும்
வறண்ட பூமி!

என்
காதல்
உறக்கம் இல்லாத
உக்கிர கானகம்!

உன்
கரிசனத்தோடு
காதலை கேட்கும்
என் கரிசக்காட்டு பூமி!

உன்
சம்மதம் சாய்க்கும்
என்
தனிமை கோலத்தை
விதைக்கும்
வசந்த காலத்தை!

எழுதியவர் : Vairamuthu S T (19-May-16, 6:28 pm)
பார்வை : 112

மேலே