அவளுக்காக ஒரு கவிதை
அவளை பார்த்ததில்லை
அவளிடம் பேசியதில்லை
வார்த்தை பரிமாற்றம் செய்துள்ளேன்
எப்படி கவிதை எழுதுவது
கவிதையே கற்பனை கலந்ததுதானே
கவிதை தொடுக்க சொற்கள் தேடினேன்
சொற்களை என்னுள் தேடுவதை விடுத்தது
அவளிடம் தேடலானேன்
அவளோ அழகான ஸ்ரீ
கன்னிடம் இருந்து
கடுஞ் சொற்கள் கேட்கவில்லை
கெஞ்சல் வார்த்தைகள் கொட்ட சொல்லவில்லை
குறும்பு சிரிப்பு தேவை இல்லை
ஆசை மனம் அரவணைக்க கேட்கவில்லை
அவளினுள் இருக்கும் குழந்தை உள்ளம் கேக்குறேன்
குலரி பேசும் குழந்தை வார்த்தை கேக்குறேன்
செல்ல சிரிப்பு கேக்குறேன்
பிள்ளையின் வெள்ளை மனம் கேக்குறேன்
வார்த்தைகள் எடுத்து தொடுத்து
கவிதை எழுதும் தருவாயில் எழுதுகோலால் எழுதமுடியவில்லை
என் மனம் கன்னியின் மனதை புண்படுத்த விரும்பவில்லை
கன்னியின் கண் மையை
எழுதுகோலின் மையாக ஊற்றி
எழுத ஆரம்பிக்குறேன்....
எழுதி முடிக்கும் முன் என் மனம்
அவளால் ஆட்கொள்ளாமல் இருக்க நினைக்குறேன்
நான் அவளுள் இருக்கும் குழந்தையாக மாற ஆசை படுகிறேன் ....

