காதல் மொட்டு

நகையே
எழில் நகையே
எனக்கு கொடுத்திடு
புன்னகையே

இதமே
அதில் சேர்த்து
எடுத்து சென்றிடு
என்வலியை

சிறுபார்வை
அது தூரல்
நனைய வைத்திடு
மழைகொடுத்து

உன்வார்த்தை
ஒன்று போதும்
வாழ வைத்திடு
ஒன்றுதிர்த்து

அருகாமை
அது மேன்மை
விலகிச் செல்லாதே
என்னைவிட்டு

உன்வாசம்
என் சுவாசம்
பூக்க வைத்திடு
காதல்மொட்டு

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (20-May-16, 6:51 pm)
Tanglish : kaadhal mottu
பார்வை : 118

மேலே