வாரண முகவா துணை வருவாய் - ஹம்சத்வனி

கோடீஸ்வர ஐயர் 72 மேளகர்த்தா இராகங்களிலும் தமிழில் கீர்த்தனைகளை இயற்றியுள்ளார். இவரது இந்த இசைத்தொகுப்பு ’கந்த கானாமுதம்’ என்று அழைக்கப்படுகிறது. இதில் ஆனைமுகன் விநாயகனைப் பற்றிய ஹம்சத்வனி ராகத்தில் அமைந்த ஒரு பாடல்.

எடுப்பு

வாரண முகவா துணை
வருவாய் – அருள்வாய், தயவாய்!

தொடுப்பு

ஆரணப் பொருளான கந்த
கானா(அ)முதத்திற்குள்
கருணாமுதம் உதவியே அருள் மத (வாரண)

முடிப்பு

இன்னிசை இயல் இலக்கியம்
............ ஆரியம் தமிழ் அறிவேதும் இன்றி
கன்னல் அன்ன கந்த கானாமுத நன்னூலை
உன்னும் கவிகுஞ்சரதாசன் நான்
உன்னருள் கொண்டே பண்ணத் துணிந்தேன்;
முன்னவனே நீ முன்நின்றால் முடியாதது
ஒன்றில்லை! ஆதலால் அதிவேகமாகவே (வாரண)

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-May-16, 6:33 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 203

சிறந்த கட்டுரைகள்

மேலே