முல்லைச்சரம் போல பற்கள்

மென்பொருள் கனவில் 48

எல்லோரையும் சமமாக பாவிப்பாள்
முல்லைச்சரம் போல பற்கள்
அவளை அழகாக படைத்த பிரம்மன் தவறா?
அதை கால காலத்திற்கு திருமணமாகாமல்
தள்ளிப்போட்டு அழகு பணம் மட்டும் போதும் என
முடிவெடுத்தது அவளா?
இல்லை வாலிப காலத்தில் ஏமாந்தாளா ?
இல்லை திருமணம் ஆகி விவாகரத்தானவளா?
இல்லை இளம் விதவையா?
எதுவும் தெரியாது
அவள் ஒரு புரியாத புதிர்
எல்லோரும் சந்தோசமாக இருக்க வேண்டும் என நினைப்பாள்
அவளும் சிரிப்பாள்
சற்று நிறத்தில் அவள் எங்கோ பார்ப்பாள்
ஒரு சோகமயமாக
ஒரு ஏக்கத்துடன்
இருப்பாள்

எழுதியவர் : கவி ராஜா (24-May-16, 1:39 am)
பார்வை : 162

மேலே