நினைவுகள் நீங்காமல்

மென்பொருள் கனவில் - 50

அவனை ஏன் திருமணம் செய்யவில்லை எனத் தெரியவில்லை
என் மனதுக்குப் புரியவில்லை
எல்லோரோடும் வெளியில் செல்வாள்
நண்பர்களோடு படம், பூங்கா எனச் செல்லும் பழக்கம் உண்டு
ஆனாலும் அவனை மட்டும் ஒதுக்கி வைத்தாள்
சில நாட்காளாக யாருடனும் ஒழுங்காக பேசுவதில்லை
ஆனால் யாருக்கும் தெரியவில்லை
புரியவும் இல்லை
அவோனோடு இவள் காதல் கொண்டாள் என என்
மனது சொல்கிறது
அமைதியானாள்
காணாமல் போனாள்
தீடிரென்று
வேலையை விட்டு நின்றாள்
திருமணம் என்றாள்..
யாருடனோ எவருடனோ
ஒரு அழகான காற்று எங்களைக் கடந்து போயிற்று ..
நினைவுகள் நீங்காமல் .......

எழுதியவர் : கவி ராஜா (24-May-16, 1:57 am)
பார்வை : 1135

மேலே