உடன் பிறக்கா சகோதிரி
தொப்புள் கொடி உறவும் அல்ல!
விரல் பிடித்த நடந்து பழகிய உறவும்
அல்ல!
சொந்த பந்தம் உறவும் அல்ல!
பள்ளி சென்று பழகிய உறவும் அல்ல! எத்தகைய உறவு அல்ல!
இப்படி இருப்பின் எப்படி மலர்ந்தது தங்கை என்னும் உறவு?
நான் மருத்துவமனையில் இருந்தேன். நீ அழைத்தாய் என்னை.
நீ! உடம்பு எப்படி இருக்கு அண்ணா என்றாய்...
அப்போது என் கண்கள் கலங்கியது!
என் மனம் மலர்ந்தது!
என் தங்கையின் மனம் கண்டு!
அன்று முதல் இன்று வரை
கண் உன் முகம் பார்க்க ஏங்கும்...
மனம் உனக்காக ஏதும் தாங்கும்...
செவி உன் குரலை
கேட்கும்...
உடல் உனக்காக ஏதும்
தாக்கும்....
காற்று பூ உறவு போல..
காலை மாலை உறவு போல....
மதி கதிரவன் உறவு போல...
வானம் புவி போல ...
அண்ணன் தங்கை உறவு என்றும் மலரட்டும்..
ஆணையிடு!இறைவா நீ ஆணையிடு!
இம்மங்கை என் தொப்புள் கொடி உறவாய் மாற... அடுத்த யுகத்தில்....