நீராதனை --முஹம்மத் ஸர்பான்

மாரிகால மழையினிலே
நனைந்தும் உதிராத
மலர் போன்ற கண்ணழகியே!
வெறுமையான தனது
இதயச்சுவடிகளில் உயிராகி
காதலெனும் இரேகை
தடவிய பொன் சிற்பமே!

இளவேனில் தென்றல் வீச
தளிர்கள் பந்தல் விரிக்க
தண்மையான போர்வைகளும்
என் மனதிலும் தீபம் ஏற்றுகிறது.

எல்லாப் புஷ்பமும் அழகு
ஆனால் எந்த புஷ்பமும்
உன்னை விட நயமில்லை.

உன் செல்லமான பாஷைகள்
உயிரை கொல்லும் இசையல்லவா?
இதயமெனும் கண்ணாடியில்
என் எண்ணங்கள் நிராயுதபாணியாக
கருமை நிற முகமூடியால்
மறைத்த கன்னம்
என் மனதில் நிழலாக தோன்றுகிறது.

உன் மீது கொண்ட காதல்
வியாதியாக கனவையும்
நலவையும் உணரத்தெரியவில்லை.
ஒவ்வொரு நொடியும்
புதுமையாய் தெரிகிறது.அந்த
நினைவுகளிலும் பல கோடி ஆனந்தங்கள்

என் மனதிலுள்ள பைங்கிளியே!
உன் நினைவால் என் முற்றத்து
வண்ணக் கிளியிடம்
என் காதலை சொல்லிச் சொல்லி
நாள் பூரா புலம்புகிறேன்;கிறங்குகிறேன்

என் சிவந்த பார்வைகளும்
புண்பட்ட உணர்வுகளும் என்
காதலை
உன்னிடம் நினைவுபடுத்தவில்லையா?

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (25-May-16, 9:37 am)
பார்வை : 83

மேலே