மண்ணை வெட்டி தின்போம்

தளை அணிந்து
பனையேறிய கால்கள்
தந்தையோடு போகட்டும் விடுங்கள்
மண்வெட்டி பிடித்த கைகள்
தந்தையோடு போகட்டும் விடுங்கள்
பூச்செடிகளுக்கு
தண்ணீர்க் குடம் சுமந்த தோள்கள்
தந்தையோடு போகட்டும் விடுங்கள்
நெற் கதிர் சுமந்த தலை
தந்தையோடு போகட்டும் விடுங்கள்
வெள்ளாமை சுமந்த முதுகு
தந்தையோடு போகட்டும் விடுங்கள்
களை பறிக்கையில்
பூவும் பிஞ்சுமாய் இருந்த
மொள செடியை தவறுதலாய் வெட்டி விட
கண்ணீர் உகுத்த கண்கள்
தந்தையோடு போகட்டும் விடுங்கள்
இனிமேல் மண்ணை வெட்டி வெட்டி
தின்போம் நாமெல்லாம்

அன்பழகன் செந்தில்வேல்

எழுதியவர் : அன்பழகன் செந்தில்வேல் (25-May-16, 11:31 am)
பார்வை : 68

மேலே