நாகரிகக் கோமாளி பகுதி 1
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் 1949 ல் வெளியான நல்ல தம்பி என்ற திரைப்படத்திற்காக அவரே இயற்றி அவரும், டி.ஏ.மதுரமும் பாடிய பாடல்.
இது நம் நாட்டு ஜனங்கள் மது, கள் குடித்துச் சீரழிந்து உயிரிழப்பதைத் தடுக்கும் பொருட்டு, மதுவை விலக்குவதன் அவசியத்தை எடுத்துச் சொல்லி பிரச்சாரம் செய்து பேசிய வசனமும், பாடிய பாடலும் அமைந்த விழிப்புணர்வுப் பாடல்.
இப்பாடல் இன்றைய நிலைக்கும் பொருந்தும்.
பாடல்:
நாட்டுக்கு சேவை செய்ய
நாகரிகக் கோமாளி வந்தானையா!
ஆட்டமாடி பாட்டுப் பாடி
அழகான ஜதையோடு வந்தானையா!
ஆட்டமாடி பாட்டுப் பாடி நல்ல
அழகான ஜதையோடு வந்தானையா!
சிரிக்க வைத்து நாட்டை செழிக்க வைக்கும்
சீர்திருத்தக் கோமாளி வந்தானையா!
மோட்டாரை விட்டிறங்கி வந்தானையா!
முன்குடுமி திருத்தி கிட்டு வந்தானையா!
ராட்டினம் போல் சுழன்று வந்தானையா - நம்ம
ராஜ்ஜியத்தை சுத்திப் பாத்து வந்தானையா!
ஐயா! கோமாளியாரே!
என்ன ஏமாளியாரே!
இந்தக் காலத்துல எங்க பாத்தாலும் பொய்யும் புரட்டும்.
நிறுத்தும், பொய்யு்ம் புரட்டும் நீங்க சொன்ன அந்தக் காலத்தில!
இந்தக் காலம் நீதியான காலமையா! நேர்மையான காலம்!
பாடல்:
அன்னியர்கள் நமை ஆண்டது அந்தக் காலம்!
நம்மை நாமே ஆண்டு கொள்வது இந்தக் காலம்!
பேசுதற்கும் உரிமையற்றது அந்தக் காலம்!
பிரச்சாரப் பெருமையுற்றது இந்தக் காலம்!
மனுசனை மனுசன் ஏச்சுப் பொழைச்சது
அந்தக் காலம் அது அந்தக் காலம் - மடமை நீங்கி
நமதுடைமை கோருவது இந்தக் காலம்!
நெனச்சதை எல்லாம் எழுதி வைத்தது
அந்தக் காலம் அது அந்தக் காலம் - எதையும்
நேரில் கண்டே நிச்சயிப்பது இந்தக் காலம்!
மழை வருமென்றே மந்திரம் ஜெபிச்சது
அந்தக் காலம் அது அந்தக் காலம்!
மழையைப் பொழிய வைக்கவே
யந்திரம் வந்தது இந்தக் காலம்!
இழிகுலமென்றே இனத்தை வெறுத்தது
அந்தக் காலம் அது அந்தக் காலம்!
மக்களை இணைத்து அணைக்க
முயற்சி பண்ணுவது இந்தக் காலம்!
துரோபதை தனை துகிலை உரிஞ்சான்
அந்தக் காலம் அது அந்தக் காலம்!
பெண்ணைத் தொட்டுப் புட்டா
சுட்டுப் புடுவான் இந்தக் காலம்!
சாத்திரம் படிப்பது அந்தக்காலம்!
சரித்திரம் படிப்பது இந்தக்காலம்!
கோத்திரம் பாப்பது அந்தக் காலம்!
குணத்தைப் பாப்பது இந்தக் காலம்!
பக்தி முக்கியம் அந்தக் காலம்!
படிப்பு முக்கியம் இந்தக் காலம்!
கத்தி தீட்டுவது அந்தக் காலம்!
புத்தி தீட்டுவது இந்தக் காலம்!
பெண்ணைப் பேயெனப் பேசி அணைச்சான்
அந்தக் காலம் அது அந்தக் காலம்!
வாழ்வின் கண்ணில் ஒன்றாய்
எண்ணி நடப்பது இந்தக் காலம்!
பலே, ஐயா! கெட்டிக்காரக் கோமாளியாரே, இன்னைக்கு நடக்கப் போகும் இந்திரசபா எனும் கூத்திலே ஆசீர்வாதம் தாங்கும்படியா உம்மைக் கேட்டுக் கொள்கிறேன்.
(தொடரும்)