அவளது வாழ்க்கை தொடர்கதையா

இலையுதிர்கால மரத்தில் ,
இளவனேில் வெயிலில,
பட்டினியிலமர்ந்த பறவையானாள்,

கையிலோரு குழந்தையும்,
கருவிலொரு உயிரும்,
கல்லறையில் கணவனுமாய்,

பதினைந்துவயதுப் பேதையவள்,
சிறுபிள்ளைதான் சேலையிலே,
விதவயைானாள் வறுமையிலே,

தீயில் இடப்பட்ட பசுமரக்கிளையாய்,
மீள முயலவும் முடியாமல்,
பற்றிக்கொண்டு பொசுங்கவும் முடியாமல்,

துவண்டுத் துடிக்கிறாள் மாது,
மூடர்களின்் மடமையின் விளைவாய்,
விதியின் கிருக்கல்கள் புரியாமல்!!!!
-g.k

எழுதியவர் : காவ்யா gk (29-May-16, 10:24 am)
பார்வை : 93

மேலே