கவிஞன்

இயற்கை அன்னையை என்றும்
இன்பமாய் முத்தமிடுவான்
தென்றல் காற்றில் நாளும்
தெம்மாங்கு பாடிடுவான்
கொட்டும் அருவி அவனிடம்
கொஞ்சுவதையும் புரிந்திடுவான்
பட்சிகள் கொஞ்சும் மொழியில்
பரவசம் அடைந்திடுவான்
காதல் வானிலையை யாரையும்
காதலிக்காமலே உணர்ந்திடுவான்
கற்பனை ஊற்றில் அவன்
காலம்வரை மிதந்திடுவான்
எண்ண அலைகள் நிதமும்
எண்ணியவாறு இல்லையென்பான்
எண்ணியவாறு இல்லாததால் தன்
எண்ணத்தை ஏட்டிலிடுவான்
ஏட்டிலிட்டதை அறியாரிடம் சொல்லி
ஏளனப்பேச்சையும் வகங்கிடுவான்
உதறி தள்ளிய பேச்சை
ஊண்டுகோலாய் எடுத்திடுவான்
வாழ்வில் என்றோ ஓர்நாள்
வெற்றியையும் கண்டிடுவான்
நிலைத்து நின்றிட தோல்வி
நிலையும் கடந்திடுவான்
இத்தனை நிலைகள் கடந்தவனே
இங்கு கவிஞனாவான்........

எழுதியவர் : புகழ்விழி (30-May-16, 9:52 am)
Tanglish : kavingan
பார்வை : 144

மேலே