பூப்பெய்த சிட்டு
என் எழிலைப் பார் பார் என்கிறது
இளம் பாவையின் கண்கள்
பக்கம் வா வா என்கிறது
இளம் காளையவன் நெஞ்சம்
தள்ளிப் போ போ என்கிறது
தமிழ் மொழி கன்னியின் நாணம்
தேன் ஊறும் பூவைக் கண்டால்
இசை பாடுன் தேனீ
எழில் மிக்க பாவையைக் கண்டால்
இரசித்து மயக்கம் பெறுவது
இளைஞனின் இயற்கை குணம்
அந்தி மாலையிலே
இளம் பூஞ்சோலையிலே
மதி மயங்கி கிடக்கும்
காதல் நெஞ்சம்!
அதைக் கண்டுக்காமல் இருக்குமா
கவிஞனின் கண்கள்தான் கொஞ்சம்
செவ்விதழ்தனைக் கண்டால்
தேனீக்கள் வந்து கொஞ்சும்
முழுமதியிடம் வானம் தினம் கெஞ்சும்
பூப்பெய்த மலரைக் கண்டு
கவிபாடாதிருக்குமா இளம் வண்டு
அது இயல்பென்று புரிந்திருந்தும்
தனக்குத் தானே வேசம் போடுமே
எந்த நாளும் பெண் பூவு
இளமையில் இணைந்து கூடாமல்
வெறுத்து தனித்து வாழ்வதில் என்ன இன்பம் உண்டு
தூங்குகின்ற காளையிவன்
உணர்வுதனை தட்டி எழுப்பிவிட்டு
வந்து நிற்கிறாளே ஒரு பூப்பெய்த சிட்டு
மதி முகத்தை மூடிக்கிட்டு