தினம் ஒரு தத்துவ பாட்டு - 15 =124

ஏழை எஜமான் என்று பேதம் பார்க்காதே
எல்லோருக்கும் ஆறடிதான் மறக்காதே !
ஏழை கோழை என வைய்யாதே –
ஏழைதான் நிம்மதியின் தவப்புதல்வன் !
ஏழையை ஏளனம் செய்கின்றவன் அரைக்கிறுக்கன்.

இயற்கையின் படைப்புகளில் அனைத்துமே ஏழைதான்
தாயின் கருவறையில் அனைவருமே கோழைதான் !
உழைப்பின் உன்னதத்தை உணர்ந்த ஜீவன்தான்
பிழைப்பின் உச்சத்தை அடைவது அறிவுதான் !

உலகிலுள்ள உயிரிணங்களுக்கு ஒரே பிறவிதான்
ஏழேழு ஜென்மம் என்பது மனிதனின் புரளிதான் !
தலகாலு புரியாமல் போடுகிற ஆட்டம்தான் - அவன்
சுடுகாடு போகும்போது அடங்குது கொட்டம்தான் !

இருக்குதென்று ஆட்டம் போட்டால்
இருப்பதையும் இழக்க நேரும் !
இல்லாதவனின் அழுகையைப் பார்த்தால்
இருப்பவனுக்கு இரக்கம் வேணும் !

தெரு பெருக்கும் தோட்டிக்கும் – தன்
தொழிலின் மீது பக்தி மீறும் !
பெரு பொல்லாத சமூகம் இதில்
போராட்டங்கள் நாளும் நேரும் !

முற்றும் துறந்த முனிவனுக்கு வாழ்க்கையில் ஏதுமில்லை
முன்னுக்கு வரத்துடிப்பவனுக்கு கையில் பணமில்லை
சற்றும் தளராத மனிதனுக்கு சாதனை தூரமில்லை…
வெற்றி மமதை ஏற்றினால் வேதனையே எல்லை !

காரணமின்றி அலைபவன் வாகை சூடுவதில்லை
ஆதாரமின்றி சொல்பவனின் சாட்சி எடுபடுவதில்லை !
சேதாரம் செய்கூலியெல்லாம் நகைகடையின் சித்துவேலை
ஏமாறுபவன் இருக்கும்வரை ஏய்ப்பவருக்கு பஞ்சமில்லை !

அறிவு புகட்டும் ஆசானுக்கு தரவேணும் மரியாதை
உரிமையோடு போராட வரவேணும் நடு பாதை !
பரிவு காட்டும் மனிதனுக்கு தூவவேணும் அட்சதை
பெருமையோடு நீவாழ பேனவேணும் நன்நடத்தை !

எழுதியவர் : சாய்மாறன் (3-Jun-16, 12:13 pm)
பார்வை : 164

மேலே