வாழ்க்கை ~ பிரபாவதி வீரமுத்து

என் கழுத்தை நெறிக்கிறாள் அவள்
கண் விழி பிதுங்கி
நாக்கு தள்ளியும்
விடவில்லை அவள்

கையையும்
தடுக்க முடியாதபடி
பலவந்தமாக
பிடித்து வைத்திருக்கிறாள்
மூச்சு முட்டுகிறது
எனக்கு ஆனாலும்
விடவில்லை கல்நெஞ்சக்காரி


என்ன ஒரு நெஞ்சழுத்தக்காரி
என்னையே கலங்கடிக்க செய்துவிட்டாள்

அடிப்பாவி
நீயெல்லாம் ஒரு பெண்ணா
கணவனையே
கொல்ல ஆசை கொள்கிறாயே
என்று கோபித்துக்கொண்டே
மயங்கினேன்
ஒன்று மட்டும் புரியாமலேயே
கழுத்தை நெறிக்கும் பொழுது அவள் ஏன் அழுதால் என்பது
மாத்திரம்

சிறிது நேரம் கழித்து
மயக்கம் தெளிந்து எழுந்தேன்
அவள்
கழுத்தை தடவி விட்டுக் கொண்டு
காலில் விழுந்து கிடந்தாள்
கால்கள் ஈரமாய் இருக்கிறது

ஏன் இப்படி எல்லாம்
நடந்துகொள்கிறாள்

என்ன நடந்தது இவளுக்கு

என் மீது மிக்க அன்பு கொண்டவளாயிற்றே
என்று மனதில் ஆயிரம் கேள்விகள் எழும்ப
அவளிடம் வினவினேன்


அவள் எதுவும் சொல்லாமல் எனையே பார்த்துக்
கொண்டிருந்தாள்
நான் குடித்து வைத்த பழரசத்தை எடுத்து குடித்தாள்

நான்:
சரி இப்பொழுது எதுவும் கேட்க வேண்டாம்.
பின்னர் கேட்டுக்கொள்ளலாம்.
நம்மிடம் சொல்லாமல் எங்கே போய்விடபோகிறாள்
என்று நினைத்துகொண்டு
அறையை விட்டு
வெளியே வந்தேன்
வந்த உடனே
வினவினான்
அவளின் அண்ணன்
உங்களுக்கு ஒன்றும் இல்லையே மச்சான்? என்று.

எனக்கு என்ன நான் நன்றாக தானே இருக்கிறேன்.


அது வந்து மச்சான்

உங்களுக்கு வேலைக்காரி
கொண்டு வந்து கொடுத்த
பழரசத்தில்
வேலைக்காரி விஷத்தை கலந்ததை
குழந்தை பாரத்துவிட்டு
அம்மா இது என்னமா என்று
நானும் தங்கையும் பேசிக்கொண்டிருக்கும் இடத்திற்கு வந்து காண்பித்தான்
உடனே அதை தங்கை
வெடுக்கென பிடுங்கி.
இது ஏது உனக்கு என்று
கேட்க.
வேலைக்காரி தான் ஏதோ ஒன்றில் கலந்து அப்பா அறைக்கு செல்கிறாள் என்று கூற
அங்கிருந்து தங்கை அலறியடித்து ஓடிவந்தாள்.
நான் வரும் வழியில் வழுக்கி விழுந்து மயக்கமாகிவிட்டேன்.

நல்ல வேளை
தலைக்கு வந்தது தலைபாகையோடு
போய்விட்டது
தங்கை உங்களை காப்பாற்றிவிட்டாள்.

என்ன மச்சான்
நான் இவ்ளோ
பேசறன்
நீங்க எதுவுமே
பேசமாட்டேங்கிறீங்க.
என்ன ஆச்சு
ஏன் சோகமா இருக்கீங்க மச்சான்.
நான் இம்புட்டு நேரம் பேசிகிட்டிருக்கன்
தங்கச்சி அறையில இருந்து வெளியே வரல.

ஐயோ பிரபா.......பிரபா.....

தங்கச்சிக்கு என்ன?

இருவரும் ஓடுகிறார்கள் அறைக்கு.

வாயில் நுரை பொங்க
உடல் தூக்கி வாரி போட்டு கொண்டிருக்க
கை கால்கள் துடித்துக்கொண்டிருக்க

அவரையும்
அண்ணனையும் பார்த்த
மகிழ்ச்சியில் புன்னகைத்தாள்.

அவர் மடியில் வாங்கிக்கொள்ள
அண்ணன் அவள்
கால்களை எடுத்து மடியில் வைத்துக்கொண்டார்

பிரபா ...என்னமா இப்படி ஒரு காரியம் பண்ணிட்டீயே...

அண்ணா எனக்கு எதுவும் இல்லனா.
இவரையும் குழந்தையையும் நல்லா பாத்துக்கோங்கண்ணா...

எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு
என் கணவர் என் அண்ணன் மடியில நான் சாகபோறனு நெனைக்கும்பொழுது...
என் குழந்தை என் பக்கத்தில உட்கார்ந்து எனக்காக அழறத பாக்கும்போது இந்த பிறவி எடுத்ததுக்கான பலன அடஞ்சிடனு தோனுது...

ஆழாதடி பட்டு
அம்மா உன்ன விட்டு எங்கயும் போமாட்டன்
உங்கூடவே தான் இருக்கன்.
அப்பா உன்ன நல்லா பாத்துப்பாரு...
சமத்து பையனா இருக்கணும்.ம்ம்ம்..
அப்பாவ நீ தான் பாத்துக்கணும்.
சரியா.....

இங்க அம்மா கிட்ட வா
உம்மா.....
அம்மாவுக்கு ஒரு முத்தம் தா.....

அவர் என் கையை பிடித்து கொண்டே இருந்தார்

நான் அவர் கையை தடவிகொடுத்து
அழாதீங்க மாமா
உடம்ப பாத்துக்கோங்க மாமா
நான் உங்களையும்
குழந்தையும் விட்டு
எங்கயும் போகமாட்டன் மாமா

மூவரையும் கடைசியாக
ஒரு தடவை பார்த்துவிட மனது சொன்னது
பார்த்துகொண்டே இருந்தேன்
மூவரும் என் கையை பிடித்துகொண்டிருந்தார்கள்
உடல் தூக்கி போடுவது நின்றது
கைகால்களின் தவிப்பு நிற்கிறது
நான் அவர்களை பார்த்து கொண்டேயிருக்கிறேன்...
என் நெஞ்சில் சாய்ந்து அவர் அழுகிறார்.
அண்ணன் மடியில் எனை தூக்கி வாரி கதறி அழுகிறார்.
என் மகன்
எனை சீண்டி சீண்டி
எழுந்திரு அம்மா...
எழுந்திரு அம்மா...
என்கிறான்.

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (4-Jun-16, 12:13 am)
பார்வை : 127

மேலே