தினம் ஒரு பாட்டு - இயற்கை - 13 = 126

இரவானால் மின்மினுக்கும் மின்மினிப் பூச்சிகள்
இடம் தெரியாமல் சிறகடிப்பதை எண்ணிப் பாருங்கள்
இது இதமான குளிர்காலம் அழைத்து குளிர் காயுங்கள்
அதன் மேனிப்பட்டு சுட்டுக்கொண்டால் திட்டி தீர்க்காதிர்கள்

இறைவன் படைத்த ஜீவன்களில் இதுவும் ஒன்று
இது செய்த பாவமென்ன மின்னல் போன்று
இரவில் மின்னிமின்னியே காலத்தை கழிக்கின்றது
இதன் பூர்வீகம் இயற்கையை பழிக்கின்றது

ஒவ்வொரு உயிருக்கும் பற்பல வியாதிகள் உண்டு
அது அவ்வப்போது வந்துப்போகும் சில்மிஷ வண்டு
ஆறறிவுக்கு ஆருதல் சொல்ல இங்கு பலபேருண்டு
அய்ந்தறிவுக்கு ஆறுதல் சொல்ல எத்தனை பேருண்டு ?

இயற்கையின் படைப்பில் யாவுமே அழிவின் ஆக்கமே
இறந்தவருக்கு மனித கணக்கில் ஏழுநாள் துக்கமே !
இருக்கும் வரைக்கும் மனிதன் போடும் வெறியாட்டமே
இறக்கும்போதும் அவன் பாடைமுன் குத்தாட்டாமே !

நெகிழ்ச்சியின் விளிம்பில் மனிதன் குதிக்கிறான்
மகிழ்ச்சியை துறந்ததும் மனிதன் துடிக்கிறான்
புகழ்ச்சியின் உச்சத்தில் மனிதன் திளைக்கிறான்
இகழ்ச்சியின் பட்சத்தில் மனிதன் களைக்கிறான்

இந்த மாற்றங்கள் மனித மனதில் மட்டுமே
இயற்கையின் சீற்றங்கள் விண்ணையும் எட்டுமே
எந்த மனிதம் மனிதனை - சீ மிருகம் என்குதோ
அந்த மனித மிருகம் மனதினில் மாசு கொண்டதே ?

பட்டுப்பூச்சி வளர்த்து துட்டு பார்க்கும் சமூகம்
மின்மினிபூச்சியை குசுவிட்டான் பூச்சியென்று இகழும் !
மனசாட்சிய மறந்துதான் சமூகமே இயங்குது
மனிதனை ஏச்சுதான் பிரளயமே பிழைக்குது !

தூக்கணாங்குருவி கூட்டில் முட்டையிடும் காக்கைப்போல்
முக்காலணா துட்டுக்காக எட்டப்பன் வாழ்க்கை வாழும்
வெட்கம் கெட்ட மனிதனே ! உன் துக்கமெல்லாம் பொய்தானே !
சட்டம் உன்னை தண்டித்தாலும், நி சட்டைசெய்வதில்லை மெய்தானே !

எழுதியவர் : சாய்மாறன் (5-Jun-16, 2:02 pm)
பார்வை : 111

மேலே