கோப்பை -சந்தோஷ்

என் கையில் கோப்பை இருக்கிறது
எனக்கு அதீதமாய் போதை ஏறுகிறது.
மேனியெங்கும் ஒருவித உணர்வில்
குதூகல வியர்வை வழிகிறது
அகம்,புறம்,சிரம் எல்லாம்
புதுவித நடுக்கம் நிகழ்கிறது.
என்னாலும் ஏதோ ஏதோ
தத்துவங்கள் உளறப்படுகிறது.

இப்போது உங்களில் பெரும்பாலான
அன்பர்கள் நினைத்திருப்பீர்கள்
என் கையிலிருப்பது மது கோப்பையென..!

அது ஏன் என் வெற்றி கோப்பையென
நீங்கள் கருதவில்லை?

அது ஏன் என் மகளின்
உலக சாதனை கோப்பையென
நீங்கள் கருதவில்லை.?

அது ஏன் என் மனைவியின்
வீரதீர கோப்பையென
நீங்கள் கருதவில்லை?

ஏனெனில் ,
அடுத்தவர்களை
அவசரத் தீர்ப்பில்....
அவரசமாய் கெட்டவரென
சொல்லிக்கொள்ளும்
உங்களுக்கு
அவசரப் போதை..!
**

இரா.சந்தோஷ் குமார்.

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (6-Jun-16, 10:09 pm)
பார்வை : 45

மேலே