நேசம்

நெஞ்சணைத்து
பாலூட்டுகையில்
மார்பு!
சீராட்டி தூங்க
வைக்கையில் மடி!
"உன்னோட கைப்பக்குவம்
யாருக்கு வரும்?
தங்கத்துல காப்பு
செஞ்சி போடனும்மா
உனக்கு!"
நா சுவை வியக்கையில் கரம்!
"எப்ப பாரு
அண்ணன்களுக்கே
செஞ்சிட்டிருப்பீயா?
நானும் நீ பெத்த
பிள்ளதான?
பொண்டாட்டி பிள்ளையோட
கஷ்டப்படுறேன்! அந்தாளு கெடக்காரு ஒலகந் தெரியாத மனுஷன்!
கடைசி காலத்துல
நா தானே உங்களுக்கு
கூழூத்தனும்?!
ஏதும் நெனைக்காம ஒரு
ரேகைய மட்டும் வையி...!
மத்தத நா
பாத்துக்குறேன்...!"
ஆசையாய் பேசி
ஆஸ்த்திப் பெறுகையில்
விரல்!
பதின்ம வயது தொட்டு
பருவம் ஒவ்வொன்றிலும்
பலன் தந்த பாகங்களையே
பிடித்துப் போன
மகன்களுக்கு
கடைசிவரை
முழுதாய் நேசிக்க
எதுவுமில்லை
தாயிடம்!!!

எழுதியவர் : தானியேல் நவீன்ராசு (7-Jun-16, 8:49 am)
Tanglish : nesam
பார்வை : 311

மேலே