தினம் ஒரு தத்துவ பாட்டு - 16 =128

பத்துப்பவுனு போட்டுவந்த பொண்ணு நான் – என்னை
பொட்டி பாம்பா அடக்கி வைக்கிறது தப்புதான்
வாயக்கட்டி வயித்தக்கட்டி நான் எடுத்துவந்த சொத்துதான்
நான் வாய்க்கவந்த வீட்டுக்கே விளக்கேத்துதா..?

பத்துப்பவுனு போட்டுவந்தப் பொண்ணே – அதுக்கா
மட்டு மரியாதை இல்லையாடி கண்ணே ?
நீ வாயக்கட்டி வயித்தக்கட்டி வாங்கியாந்த சொத்துக
என் வெத்தலைப்பாக்கு செலவுக்கே பத்தலை…!

பொண்ணுவூட்டு சீதனமா நெறைய வாங்குற
புள்ளவூட்டு சீதனமா எவ்வளப் போடுற..?
கணக்கு கேட்டாக்கா கோணக் காரணம் சொல்லுற
ஆனா நான் கன்னிக்கழியரத மட்டும்
ஏன் அடிக்கடி தடுத்து நிறுத்துற !

அங்கதான்டி காம தங்கபஷ்ப்பம் இருக்குது
அந்த கண்றாவி நடந்துப்புட்டா
தங்கம் எப்போ என் கைக்கு வர்றது..?
முளையில வளரவிட்டா எல்லாமே முற்றிடும்
பிறகென்ன வாய்க்க வந்தவளுக்கே முதலிடம் !

பொண்ணாப் பொறந்ததே பாவமா ? – எல்லாம்
பொன் பொருள் கொடுத்தாதாம் ஆகுமா !
மாமியாருங்க கொடுமைகளை தாங்காமா
மருமகள்கள் தீயீல வேகுறது நியாயமா ?

நான் கூட உன்னைப் போலதான்
மேனியெங்கும் பூட்டிவந்தேன் தங்கமா !
இப்பக்கூட நான் கொடுத்தா என்னை கட்டிக்க
எத்தனைப்பேர் போட்டி போடுறானுங்கனு பாத்துக்க !

பொறந்த வீட்டுல வளரும்போது
பெண்ணை பெத்தவங்கதாம் எல்லாமே !
வாய்ச்ச வீட்டுக்கு வரும்போது
வாழ்க்கை கொடுத்தவங்கதாம் எல்லாமே !
அதுக்கு மதிப்பு கொடுத்து நடந்தும் கூட மரியாதை இல்லையா
அட மாமியாரே உன்னால எனக்கு எந்நாளும் தொல்லையா !

உம் மதிப்ப கொண்டுப்போயி மாட்டு சாணியில் போடுடி
மாங்கா நெக்லஸ வாங்கியாந்து மாமியாருக்கிட்ட சேருடி
மனுஷியாப் பொறந்தாலே மானத்துக்கு பங்கம்டி
மாமியாரெல்லாம் சாமியாரானா வாழ்க்கையே போருடி !

எழுதியவர் : சாய்மாறன் (7-Jun-16, 6:04 pm)
பார்வை : 117

மேலே