மத்த மயிலன்ன சாயலாய் இத்திறத்த வெஞ்சினார் பேர் – ஏலாதி 31

மத்த மயிலன்ன சாயலாய் மன்னியசீர்த்
தத்தன் சகோடன் கிருத்திரமன் - புத்திரி
புத்ரனப வித்தனொடு பொய்யி லுபகிருதன்
இத்திறத்த வெஞ்சினார் பேர். 31 ஏலாதி

பொருளுரை:

களிப்புப் பொருந்திய மயிலையொத்த சாயலையுடைய பெண்ணே!

பெற்றோரிருவர் அல்லது அவருள் ஒருவரால் மற்றொருவருக்கு சுவீகாரம் கொடுக்கப்பட்ட நிலையான சிறப்பினையுடைய தத்தனென்றும்,

பிறனுக்குண்டான கர்ப்பத்தோடு விவாகமான பெண்ணிடம் அந்தக் கர்ப்பத்தில் பிறந்த சகோடனென்றும்,

கண்டெடுத்து வளர்த்துக்கொள்ளப்பட்ட கிருத்திரமனென்றும்,

மகளென்றும் மகனென்றும்,

பெற்றோரால் விடப்பட்டுப் பிறனொருவனால் வளர்த்துக் கொள்ளப்பட்ட அபவித்தனென்றும்,

பொய்ம்மையில்லாத தானாகவே ஒருவற்குச் சுவீகாரம் புகுந்த சுவயந்தத்தனென்றும்

இவ்வகையனவும், மற்றுமுள்ளோரும் உண்டு.

குறிப்பு:

தத்தன் – பெற்றோரிருவர் அல்லது அவருள் ஒருவர் மற்றொருவருக்கு விதிமுறைப்படி சுவீகாரம் கொடுக்கப்பட்டவன். இவனைச் ‘சுவீகார புத்திரன்' என்பர். (Adopted child)

சகோடன் - Son begotten by another father but born after marriage, as received with the bride, திருமணத்தின்போதே கருவிலிருந்து பின் பிறந்தவன், பிறனுக்குண்டான கர்ப்பத்தோடு விவாகமான பெண்ணிடம் அந்தக் கர்ப்பத்தில் பிறந்தவன். (மநு 9, 173) (Illegitimate child)

கிருத்திரமன் - கண்டெடுத்து வளர்த்துக்கொள்ளப்பட்டவன். (Orphan, Destitute)

புத்திரி, புத்திரன் - மகள், மகன் (Daughter, Son)

அபவித்தன் - Son abandoned by his parents and adopted by a stranger
பெற்றோரால் விடப்பட்டுப் பிறனொருவனால் வளர்த்துக் கொள்ளப்பட்டவன். (Foster)

உபகிருதன் அல்லது சுவயந்தத்தன் - Self-given son, son adopted with his own consent
தானாகவே ஒருவற்குச் சுவீகாரம் புகுந்தவன் (ஏலா 31)

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-Jun-16, 10:28 pm)
பார்வை : 65

மேலே