கடத்தப்படும் வரலாறு - 3

காந்தம் சாதிலிங்கம் மனோசிலை
காரம் கந்தகம் பூரம்
கௌரி வெள்ளை தொட்டி
ஒன்பதின் கட்டே நவபாசாணம்.

தமிழறிவியல் ஆதாரம் நவபாசாணம்
பாசாணம் என்பது நஞ்சாகும்
அவையொன்றாய்ச் சேர்கையில் மருந்தாகும் - அது
சித்தர்கள் கண்ட அருமுறையாகும்.

எட்டெட்டில் ஒன்று கழிந்தால்
பாசாணம் அனைத்தும் நஞ்சாம்
கழிந்த ஒன்றே முறிக்கும்
கொடுநஞ்சை அதுவே நீலியாகும்.

சிற்பங்கள் வெறும் கல்லல்ல
பன்நெடுங் காலத்தின் பண்பாடு
பழந்தமிழர் திறமையின் வெளிப்பாடு
அவைநம் பெருமரபின் வரலாறு.

- செ.கிரி பாரதி.

விளக்கம்:
நவபாசாணம் - பாசாணம் என்றால் நஞ்சு என்று பொருள். பாசாணத்தில் 64 வகையுண்டு. 64 பாசாணத்தில் நீலி என்பது ஒரு பாசாணம். இந்த நீலி எனும் பாசாணம் 63 பாஷாணங்களின் நச்சுத்தன்மையை முறிக்கக்கூடியது. நவ பாசாணம் என்றால் ஒன்பது வகையான நஞ்சுகளின் கூட்டு. அந்த ஒன்பது வகைகள் பின்வருமாறு அதற்கான நவீன வேதியல் விளக்கத்தோடு,

கௌரிப் பாஷாணம்: Arsenic Penta sulphite
கந்தகப் பாஷாணம்: Sulphur
மனோசிலைப் பாஷாணம்: Arsenic Di sulphite
பூரம் பாஷாணம்: Mercuric Chloride
வெள்ளைப் பாஷாணம்: Arsenic Tri Oxide
மற்ற, சாதிலிங்கம், காந்தம், காரம், தொட்டி போன்றவைக்கான சரியான ஆய்வு முடிவுகள் இல்லை.

போகர் மூன்று நவ பாசாண சிலைகளை உருவாக்கினார் என்பது உறுதி செய்ய இயலாத செவிவழிச் செய்தியாகும். அவை உள்ள இடங்கள்

• பழனி தண்டாயுதபாணி (முருகன்) கோவில், திண்டுக்கல் மாவட்டம் .
• குழ‌ந்தை வேல‌ப்ப‌ர் கோவில், பூம்பாறை, கொடைக்கான‌ல், திண்டுக்கல் மாவட்டம். கொடைம‌லைச‌ரிவில்,பூம்பாறையில் உள்ள இக்கோவில் மிக‌ப்ப‌ழ‌மை வாய்ந்த‌து என்பதற்கு இங்குள்ள கிரந்த எழுத்துக்களும், சமணர் காலச் சிலை அழகும் சான்று.
• மூன்றாவது சிலை யாரோ ஒரு வம்சத்தினர் வீட்டில் வைத்து பூசை செய்வதாகவும் சொல்லப்படுகிறது.

எழுதியவர் : செ.கிரி பாரதி (8-Jun-16, 11:38 am)
பார்வை : 227

மேலே