கல்விக்கழகு கரவின்றி வாழல்

கற்றதுவுங் கற்றொருபால் நிற்பக் கடைப்பிடியும்
மற்றொருபால் போக மறித்திட்டுத்-தெற்றென
நெஞ்சத்துட் டீமையெழுதருமேல் இன்னாதே
கஞ்சத்துட் கற்பட்டாற் போன்று.

(பதவுரை) கற்றது கற்று ஒருபால் நிற்பவும்-கற்கவேண்டிய நூல்களைக் கற்றதனாலாய அறிவு ஒழுக்கத்திற் கலவாது ஒருபுறம் நிற்கவும், கடைப்பிடி மற்றொருபால் போகவும்-எடுத்தகருமத்தை முடிக்கும் துணிவும் அந்நூற் றுணிபுகளிற் றிறம்பிமற்றொருபுறஞ் செல்லவும், மறித்திட்டு-நல்வழிச் செலவைத் தடுத்து, நெஞ்சத்துள்-மனத்தின்கண்ணே, தெற்றென-கடுக, தீமைஎழுதருமேல்-தீய எண்ணந் தோன்றுமாயின், கஞ்சத்துள்-தின்னப் புகுந்த அப்ப வருக்கத்துள், கல் பட்டால் போன்று-பொருந்திய கல்லே போல, இன்னாது-அது மிகத் துன்பந் தருவதாகும்.

(குறிப்பு)
கரவு-தீய எண்ணம். எழுதரல்-எழுதல;் தரு: துணைவினை, கஞ்சத்துள்-அழகியதாய் மலர்ந்துள்ள தாமரைப் பூவினிடத்தே எனலுமாம்.

எழுதியவர் : (12-Jun-16, 10:06 pm)
பார்வை : 53

மேலே