நான் நானாக

"" நான் நானாக ""

செல்போன் சிணுங்கல்,
அன்பாய் அழைக்க,
குயிலின் கொஞ்சலுடன்,
ஆனந்த கானத்துடன் ,
விடிகிறது என்
காலை பொழுது...!

பாதி உறக்கத்திலும்
உணர்கிறேன். ....
பக்கத்து வீட்டு
காபின் நறுமணத்தை...!

விழித்து பார்க்கிறேன்
அழகு ஒன்று கண்ணாடியில் ....
நான் நானாகி நிற்கிறேன்....!

என்னை பார்
யோகம் வரும்,
அதிஷ்டதிற்கு இப்படியும்
ஓர் பெயர் உண்டு. ...
இங்கு நானே
அதிஷ்டமாக என்னில்....!

திருஷ்டி
பட்டு விடும் என்று
முற்றத்தில் கோலமிட்டேன்....
அடுத்தவீட்டு பாட்டியின்
கத்தல்.....
அடிப்பாவி...!!
நான் அப்போதே கோலம்
போட்டுவிட்டேனே ? என்று.!

தெரியாததை ,
தெரிந்தது போல்
காட்டுவதில் பெண்கள்
எப்போதுமே கில்லாடிகள்...!
அதே வித்தையை
சமையலிலும் காட்டுகிறேன்......!!

அரக்க பரக்க
சமையல் செய்து...
விரிந்த கூந்தலை
அள்ளி முடிந்து...
அலுவலகம் செல்ல துவங்கும் ,
அந்த நொடியில்
அடங்கிவிடுகிறது
என் ஆணவம்.....!

வீட்டு விட்டு வெளியே வந்து
திரும்பி பார்க்கிறேன்...
இன்று யாரவது வந்து
பத்திரமாக போய் வா....
என்று
சொல்ல மாட்டார்களா என...
எதிர்பார்ப்புகள் தானே வாழ்க்கை. ....!!

இராஜா தேசிங்கு காலத்து குதிரையை வாடகைக்கு
எடுத்தாலும். ....
காலில் சக்கரத்தை
கட்டிக்கொண்டு ஓடினாலும் ,
அலுவலகத்திற்கு செல்ல பேருந்தையும் பிடிக்க
முடியவில்லை. ...
தாமதத்தையும் தவிர்க்க முடியவில்லை. ....!!

பல மொழி திறமை
எனக்கிருந்தும்...
தாமதத்திற்கு மேலதிகாரி
கேட்கும், கேள்விக்கு
மொழியற்றவளாகிறேன்....!
விதி என்றுமே எனக்கு சதியே.!!

தனிமையில் சுகம் காண்கிறேன் , இனிமை
அதுவென்றல்ல....!
என்னோடு கைக்கோர்க்க
யாரும் இல்லை. ...
என்ற நிஜத்தின்
பிம்பம் இது...!!

விழி தேடிப்பார்க்கிறது,
வழி துணைக்கு ஆள் அல்ல,
வார்த்தை துணைக்கு. ..
யாராவது வருவார்களா என்று...!

வாதாட ஆள் இல்லாத போது தான்....!
வாழ்க்கை வானமாகிறது...!!

தனிமை தொலைக்க
பல நேரங்களில் குயிலாகிறேன் ...
நான் முனங்குவது கூட
இசையாகிறது...
அவையே....
என் இதயத்தின் பாஷையாகிறது...!

கவலைகள் கிடக்கட்டும் ,
நடப்பது நடக்கட்டும் ,
அழுவதில் இலாபம் என்ன,?
அடுத்தவர் வார்த்தைகளில் நோவதென்ன...
நான் நானாகி நின்று
சிரிக்கிறேன்... அதில்
என்னை சுற்றி ஓர் உலகம் !

தனி மரங்கள் மனதுக்குள் எப்போதுமே தோப்புதான்..
நான் தனி மரம் தான்,
மனதளவில் தோப்பானேன்,
நான் நானாகி போனேன் !
நல்லதொரு கவியாகிபோனேன்..!!

விப்க்யோர். வி...

எழுதியவர் : விப்க்யோர். வி... (13-Jun-16, 10:53 pm)
Tanglish : naan naanaaga
பார்வை : 421

மேலே