’ஹுக்கும்’ன்னா என்னடா

’ஹுக்கும்’ன்னா என்னடா?
###################################################
இதைத் தொடர்ந்து வாசிக்க பொறுமையும் மொழிப்பற்றும் தேவை
@@@@@@@@@@@@@@@
”ஹுக்கும், க்ஹுக்கும்”ன்னு சொல்லிட்டு இருக்கறயே அது என்னடா

தம்பி.
@@@@@@@@@@@@@
நான் சொல்லறத மொதல்ல கேளுங்க அண்ணே. அண்ணே,

பிள்ளைகளுக்கு இந்திப் பேர வைக்கறதுதான் தற்காலத் தமிழர்களின்

உயர்ந்த பண்பாடு. சினிமா மோகத்திலெ தமிழர்களை மிஞ்சும் வேறு

எந்த இனமும் உலகத்திலே கிடையாது அண்ணே. அதனாலதானே ஒரு

நடிகரை தமிழ் நாட்டின் முதலமைச்சர் ஆக்கி 1977 லிலேயே உலக

வரலாறு படைச்சு உலக அரசியலுக்கு வழிகாட்டியவர்கள் நம்ம

தமிழர்கள்தான் அண்ணே.
@@@@

என்னடா சொல்லற? உம் பையம் பேரு என்னன்னு சொல்லுடா தம்பி.

@@@
அத அப்பறம் சொல்லறென் அண்ணே.

உங்களுக்குத் தெரியாதது ஒண்ணும் இல்ல அண்ணே. தமிழ்

ஆசிரியர்கள் தமிழ் பேராசிரியர்களில்கூட 98% பேர் அவுங்க

குழந்தைகளுக்கு திரைப்படத் தாக்கத்தாலே இந்திப் பேருங்கள வைக்கற

அளவுக்கு மொழிப்பற்றும், கவர்ச்சி நடிகைகள்/நடிகர்கள் அணியும் அந்த

அற்புதமான புனிதமான உடைகள் மாதிரியே நம்ம பிள்ளைகளும் ஆடை

அணியறதைப் பாத்து ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் நம்ம

மூத்தகுடி தமிழ்.ப் மக்களுக்கு. இதெல்லாம் நம்ம பொற்காலமா

விளங்கும் தற்காலத் தமிழரின் உயர்ந்த பண்பாட்டின் அடையாளச்

சின்னங்கள் அண்ணே.
@@@

அதெல்லாம் சரி. எனக்குத் தெரிந்த செய்திகள்தான். உம் பையம் பேரு

என்னன்னு சொல்லவே இல்லையே.

@@@@

எம் பையம் பொறந்து 3 நாள்தான் ஆகுது. தாயும் சேயும் நலமா இன்னும்

மருத்துவ மனையிலெ தான் இருக்காஙக. பையனுக்கு என்ன இந்திப்

பேர வைக்கறதுன்னு யோசிச்சுகிட்டு இருந்தேன். அப்பத்தான்

‘தி இந்து’ (‘The Hindu’) ஆங்கில நாளிதழை எடுத்துப் படிக்க

ஆரம்பிச்சேன். முதல் பக்கத்திலேயே ஒரு செய்திலெ ’ஹுக்கும்’ சிங் –

ங்கற பேரப் பாத்தென். அந்தப் பேரு புதுமையா இருக்குதேன்னு எம்

பையனுக்கு (Hukum) ’ஹுக்கும்’-ங்கற பேரையே வச்சிருச்சலாம்னு

முடிவு பண்ணிட்டேன் அண்ணே.

@@@

அட எந்தப் பேரா இருந்தா என்னடா தம்பி. அது இந்திப் பேரா

இருக்கணும் அதுதாண்டா முக்கியம். அர்த்தம் என்னவா இருந்தாலும்

பரவால்லடா.
@@@
ரொம்ப நன்றி அண்ணே. உஙக மாதிரி தீவிர ஆதரவாளர்கள்

இருக்கறதாலதான் நாம தமிழ் மொழியிலயும் தமிழ்ப் பண்பாட்டிலும்

பெரிய புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்த முடியுது.

@@@@

हुकुम = Hukum = SPADE = மண்வெட்டி, மண்வாரி
@@@
spade
/speɪd/
####நன்றி; விக்கிபீடியா.
A spade is a tool primarily for digging, comprising a blade – typically narrower and less curved than that of a shovel – and a long handle.[1] Early spades were made of riven wood. After the art of metalworking was discovered, spades were made with sharper tips of metal. Before the introduction of metal spades manual labor was less efficient at moving earth, with picks being required to break up the soil in addition to a spade for moving the dirt. With a metal tip, a spade can both break and move the earth in most situations, increasing efficiency.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சிரிக்க அல்ல. சிந்திக்க . மொழிப்பற்றை வளர்க்க. பிற மொழிச்

சொல்லின் பொருள் அறிய. நம்மொழி பெரும்பாலான மக்களின்

பயன்பாட்டில் இருக்கும் செம்மொழியாக இருக்கும்போது நம்

பிள்ளைகளுக்கு பிறமொழிப் பெயர்களைச் சூட்டுவது உலகின் முதன்

மொழியாம் சீரிளமை குன்றா நம் செம்மொழியையும் நம்மையும் இழிவு

செய்து கொள்ளும் செயலாகும்.
#############################################################################
#############################################################################

Ronald Reagan
Ronald Wilson Reagan (/ˈrɒnəld ˈwɪlsən ˈreɪɡən/; February 6, 1911 – June 5, 2004) was an American politician and actor who served as the 40th President of the United States from 1981 to 1989.
_____From Wikipedia, the free encyclopedia

எழுதியவர் : மலர் (16-Jun-16, 12:00 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 121

மேலே