இலவசம் எனும் வசியம்
வசப்படாதவர் கூடவசப்பட்டுவிடுவார் இலவசமெனும் வசியத்திற்கு
அடுப்புல வேகுற அரிசி பருப்பு; இடுப்பில கட்டும் வேட்டி சேலை;கூட கழுத்தில தொங்குற தாலி
முதல்கொண்டு இலவசம்;
காடு மேடு பள்ளம் எனவீடு வாசல் இலவசம்;பட்டி தொட்டியெல்லாம்இட்டிலியும் சட்டிணியும்அறைச்சிக் கொடுக்கிறமிக்சி கிரைண்டரு இலவசம்;
கலைகள் அறுபத்து நான்கு;அதனுள் வசியமும் ஒன்னு அடங்கும்; காதலில் தோல்வியா வசியம் பண்ணி கன்னியரை கலகலக்கவைத்து; வேடிக்கை பார்ப்பார்கள்;இந்த இலவசம் என்னும் வசியமோ; நாட்டையே கலகலக்கவைத்து;
சோம்பலை வளர்த்து விட்டு; தான் நினைத்த காரியம் நல்லபடியாய் நிறைவு பெற்றதென்று இருக்கிறது;
பறவைகளை வசியம் பண்ண தாணியத்தை வீசினால் போதும்;
கால் நடைகளை வசியம் பண்ணபச்சை பசும் புற்கள் போதும்;
இந்தவகையில் இலவசத்தைகாட்டினால் போதும்; நாடே மடங்கிசலாம் போடும்; அதுவும் ஒருவகை ஏசகமே; அதிலே ஒருவகை சூசகம் மறைந்திருக்கும்; அதைப்பற்றி யார்கவலை பட்டார்;
ஐந்தாண்டுக்கு நம் உரிமையைஅடமானம் வைத்துவிட்டதை அறியும்போது; அடடா ஒரு கோட்டருக்கும்; ஒரு பொட்டளம் பிரியாணிக்கும்; ஒரு காந்திதலைநோட்டுக்கும்; ஆசைப்பட்டு; கேவலமான கையேந்தும் அவல நிலைக்கு ஆளாகி விட்டோமே; என்று இன்று வருந்தி என்ன லாபம்; என சிந்திக்க முற்பட்டு விட்டது நாடு;
அத்தகையோரை; கண்ணால்பார்ப்பதற்கும்; காதால் கேட்ப்பதற்கும்;பெருமையாய் இருக்கிறது;
நாள்பட நாள்பட ஒரு பெண்கட்டினால்; ஒரு பெண் இலவசம்; என்ற நிலை வாராது என்பது சந்தேகமே;
ஊருகெட்டு போனதுக்கு வளையாததும் விளை யாததுமே அடையாளம்; நாடுகெட்டு போனதுக்கு இலவசமே அடையாளம்;
இலவசம் எனும் வசியம்முதன் முதலில் கண்டு பிடித்துஇந்நாட்டுக்கு வழங்கியவரைபோற்றலாமா இல்லைதூற்றலாமா என்று சீட்டில் எழுதிகுலுக்கிப் போட்டு எதைஎடுப்பதெற்று ஒருதிகைப்பு நெஞ்சிலே•••!