குறும்பு

குறும்பு

சிறு வயதை உணர்த்தும்
வேறு உவமை எதற்கு

குறும்பு கண்களை கடக்கும்
கரு குழியும் இருக்கு

குறும்பு குழந்தையை துரத்தும்
நெடு வார்த்தைகளும் இருக்கு

குறும்பு குழந்தையை
பார்த்ததும்
நடுங்கும் ஊர்களும் இருக்கு

கற்களை பார்த்தால்
விளங்கும் பயப்படும்

எறும்புகளை பார்த்தால்
உயிரும் கொஞ்சம் மிச்சப்படும்

சொற்களை உச்சரித்தால்
சொற்கள் சொற்களில் மிச்சப்படும்

கண்களை பார்த்தால்
கண்கள் பயத்தில் பயப்படும்

எல்லைகள் இவர்களுக்கு எல்லை

தொல்லைகள் இவர்களுக்கு
இல்லை

அழுகை இவர்களின் கோட்பாடு
அழுகையை ஓய்ப்பதே
தாய்மார்களின் பெறும்பாடு

குறும்புகள் இல்லையேல்
இவர்கள் இல்லை
குழந்தைகள் என உணர்ந்தால்
கடுஞ் சொற்கள் இல்லை

ஒவ்வொன்றும் அழகுகள்
நம்மை ஆக்கும் அடிமைகள்

ஒவ்வொன்றும் கவிதைகள்
நம்மை வாசிக்கும் எழுத்துக்கள்

-மனக்கவிஞன்

(குறும்பு குழந்தையை பார்த்ததும் தோணியது துாண்டியது)

எழுதியவர் : மனக்கவிஞன் (18-Jun-16, 6:00 pm)
Tanglish : kurumbu
பார்வை : 1223

மேலே