லச்சா, லச்சா

லச்சா, லச்சா
@@@@
யார பாட்டி லச்சா, லச்சா –ன்னு கூப்படறீங்க?
@@@
வாடா பொன்னப்பா, எம் பேத்தி லச்சாவத்தாண்டா கூப்படறேன்.
@@@
பாட்டி அவ பேரு லச்சா இல்ல. லஜ்ஜா. அது வங்காள மொழில

வெளியான ஒரு பிரபல நாவலோட பேரு. அதுக்குப் பல அர்த்தம் இருக்கு.
@@@
அட போடா பொன்னு எம் வாயிலெ நொழையாத பேரா இருக்குதே. நா

என்னால முடிஞ்ச மாதிரிதாம் சொல்லமுடியும்.
@@@
பாட்டி லஜ்ஜாவதியே-ங்கற சினிமாப் பாட்ட நீங்க கேட்டதில்லையா?
@@@
அட போடா பொன்னு, அந்தக் காலத்திலெ வெஙகலக் கொரல்ல

பாட்டுப் பாடின சவுந்திரராசன் பாடினமாதிரி பாடறவங்களா

இருக்காங்க. இப்பெல்லாம் நம்ம தமிழ சரியா உச்சரிக்கத் தெரியாத

வேற மொழி பேசறவங்க. தகரக் கொரல்ல கரகரன்னு பாடறவங்க

பாட்டையெல்லாம் நா கேக்கறதில்லடா. சரி, எம் பேத்திக்கு லச்சா –

ன்னு பேரு வச்சிருககாஙகளே அதுக்கு என்னடா பொன்னு அர்த்தம்?
@@@
லஜ்ஜா –ங்கறது வங்காள மொழிப் பேரு. அதுக்கு வெட்கம். நாணம்.

அடக்கம்-ன்னு பல அர்த்தங்கள் இருக்குது பாட்டி.
@@@
அந்த வங்காள மொழியப் பாத்தா இந்தி மாதிரியே இருக்குதே.
@@@
ஆமாம் பாட்டி, வட இந்தியாவிலே இருக்கற எல்லா மொழிங்களும்

சமஸ்கிருதமும் பாரசீகமும் கலந்த கலப்பட மொழிஙக பாட்டி..

என்னமோ போடப்பா. நம்ம தாய்மொழிலெ பேரு வச்சாத்தான்

நமக்குப் பெருமை.


@@@

Lajja = लज्जा = Bengali: লজ্জা Lôjja) (Shame) = Blush, Shame, Bashfulness, Pity, Shyness, Modesty
நாணம், வெட்கம், குற்ற உணர்வால் ஏற்படும் மனம் புண்படும் நிலை. கடுமையான அடி, நாணுகின்ற, இரக்கம், தன்னடக்கம்.

@@@@
Taslima Nasrin என்ற வங்காள தேச பெண் எழுத்தாளர் எழுதிய நாவல் ’லஜ்ஜா’

ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாக அவர் வேறு நாட்டில் வாழவேண்டிய நிலை

ஏற்பட்டது. இவர் மேலைநாட்டு நாகரிகத்திலும் சுதந்திரமான

வாழ்க்கையிலும் ஆர்வம் உள்ளவர்.
***
Nasrin dedicated the book "to the people of the Indian subcontinent," beginning the text with the words, "let another name for religion be humanism."
@@@@
நனறி: விக்கிபீடியா , மேக்ஸ்கியான்காம்., பூச்சரம்நெட்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
எம் மொழி செம்மொழி
சீரிளமை குன்றா உலகின் முதன் மொழி!

எழுதியவர் : மலர் (19-Jun-16, 8:20 pm)
பார்வை : 116

மேலே