தினம் ஒரு தத்துவ பாட்டு - 19=140

தன்னை மறக்க தண்ணியடிக்கும் தத்திரவாதியே..!
உன்னை சுமக்க தோள்கொடுக்கும் சக்தியில்லையே..!
என்னை மணக்கும் முன்பாக உன்புத்தி அறியலையே..!
கண்யிருந்தும் குருடானேன் என்வாழ்க்கை பலியானதே..!

வாழ்வோடுப் போராடும் குடும்பங்கள் எத்தனையோ
குடிகாரன் குடும்பம் எளிதில் மீள்வது சாத்தியமோ
வக்கணையா வயிராறிய நாட்கள் எத்தனையோ - நி
குடிப்பதற்கு சாராயம் மட்டும் தடையில்லையே

பள்ளியெழும் பிள்ளைக்கு பால்வாங்க வக்கில்லையே-ஆனால்
பட்டையடிக்க உனக்குமட்டும் துட்டுக்கு குறைவில்லையே…!
பசித்தொல்லைத் தாளாமல் நம்பிள்ளை பிச்சையெடுக்கிறதே
பிச்சையெடுக்கும் பிள்ளையை பெத்தக்கரம் பிச்சிமேயுதே..!

பால்யவுறவுக்கு மட்டும்தான் நான்வுனக்கு நல்ல பொண்ஜாதியா
மத்த நேரமெல்லாம் நான்வுன் கண்ணுக்கு கெட்ட அவுசாரியா
படுக்கை விரிக்கும் முன்னே அணைக்க துடிக்கிற ஆண்ஜாதியே
வாக்கப்பட்டப் பெண்ணுக்காக பரிதாபப்பட மறுப்பதேனய்யா ?

ஆல்ஹகாலே உயிரென்று அடிமையாகும் மானிடரே
அதனால் - ஆயுசு குறைவென்று யோசிக்க மறந்தீரே
அரசாங்கம் டாஸ்மார்க்கில் அன்றாடம் சாதனை
ஆங்காங்கே தாய்மார்கள் அடைகிறார்கள் வேதனை

ஆயிரம்தான் போராட்டம் நடத்தினாலும் ஒழியவில்லை
சாராயம் இல்லையென்றால் இலவசங்கள் கிடைப்பதில்லை
ஓசிக்கு ஆசைப்பட்டே ஓட்டுக்களை அளிக்கிறோம்
ஒன்றுக்கும் ஆகாததால் ஒப்பாரி வைக்கிறோம் !

அய்ந்தாண்டு ஆளுகையில் தேனாறும் பாலாறும்
கலந்தோடி பரவுவதாய் பரவசம் அடைகின்றனர் !
மேற்கொண்டு எங்களையே மீண்டும் ஆள்வதற்கு
வாய்ப்பளிக்க வேண்டுமென்று வாக்குப்பிச்சை கேட்கின்றனர் !

மாற்றி மாற்றி பார்த்தாலும் மாற்றமென்னவோ இல்லையே
குட்டையில் ஊறிய மட்டைகளாய் சட்டங்களை இயற்றுதே
குடி கடைகளை ஊரெங்கும் ‘பார்’-களோடு திறந்துவிட்டு
குடி குடியை கெடுக்கும் என விளம்பரங்கள் செய்கிறதே…!

எழுதியவர் : சாய்மாறன் (20-Jun-16, 10:50 pm)
பார்வை : 138

மேலே