கிராமம் மாறும்போது மனசு உடஞ்சி போகுது


யானை வந்தால்
தோரணையை காட்டும்
சிறுவர் கூட்டம்
டிக்கட் இல்லா காட்சி

பூங்கா வனம்
ஆகிபோகும்
வீடு கட்ட தோண்டிய
வானம் கிடங்கு

கட்டையாய் வெட்டிய
முடியை கண்ணாடி பார்த்து
ஒருமை வசனத்தில்
சந்திரனை திட்டுவது

பீடி சுற்றும் இளசுகளை
சுற்றி நின்று பேசியது
சுடிதார் இளசுகளை
சும்மாவே பார்க்கிறது

அப்பாக்களுக்கு பயந்து
கிரிக்கட் பேட்டை
ஒழித்து வைத்து
இறுதியில் எரிந்து போவது

பார்க்காத எந்திரமாய்
ராட்டினத்தை பார்த்தது
மலிவு விலை
மாம்பழம் வாங்கியது

சங்கடமாகி போகிறது
பங்களா சுரண்டை
சங்க கூட்டம்
பார்க்காமல் போய்விட்டால்

ஜெயித்தால் மட்டும்
ஓலமிடுவது
பக்கத்துக்கு ஊர்
மேட்சுக்கு போனால்

எல்லோரையும் நலம்
விசாரித்து பணிக்கு திரும்பும்
நெடுந்தூர பணி நண்பர்களை
வழி அனுப்புவது

சென்னை பணி என்றாலே
இந்தியா விட்டே
வெளியே போற மாதிரி
ஒரு கஷ்டமான பீலிங்

காதலித்த நேசித்த
பேசிவந்த பார்த்து வந்த
எல்லாருக்கும்
கல்யாணம் நடக்கும்போது
வர்ற ஒரு கஷ்டம்

எல்லாமே என்ஜாயாதான்
தெரிந்து வந்தது
இப்போது எல்லாம்
ஆகிப்போனது தலை கீழ்

மெமரி கார்டு
போட்ட கைபேசிதான்
௬ வயது பையனுக்கும்
பொழுது போக்கு சாதனம்

எள்ளுன்னா எண்ணெயோட
வந்து நிற்கும்
இளைய தலை முறைகள்
எங்கு பார்த்தாலும்

இங்கிலீஷ் தேர்வில்
பாசாகிட்டாலே
காதலில் ஜெய்ச்ச மாதிரி
ஒரு சந்தோசம்

மெயில் ஐ டி கேட்டா
காலர் ஐ டி யே கொடுக்கிற
விசயமுள்ள பசங்களாகி
விஷமமும் படிச்சிட்டானுங்க

அவுட் கோயிங் இல்லாட்டாலும்
இன்கமிங் வச்சி
என்னல்லாம் பண்றாங்க
இடிஞ்சி போயிருவீங்க ..

காலம் இன்னும்
மாறும்போது மாற போகுது
நம்ம கிராமமும்
மனசு உடஞ்சி போகுது ..

தாய் மண் முதல்
பாரின் வரை
பிழைக்க போனாலும்
பிறந்த ஊரை
மறக்க முடிவதில்லை
கால் வைத்துக்கு
கஞ்சி குடிச்சாலும்
சொந்த காலில்
நிற்கணும் சொன்ன
தாத்தா பாட்டி
வார்த்தைக்காக
தன்னையும் வருத்தி
தன் தன் குடும்பத்துக்காக
தானியங்கி எந்திரமாய்
உழைக்கும் அனைத்து
உள்ளங்களுக்கும்
தெரியும்
பிரிவின் வலியும்
நெகிழ்வின் நெருடலும்











எழுதியவர் : பிரியா பாரதி (22-Jun-11, 8:05 pm)
சேர்த்தது : PRIYA BHARATHI
பார்வை : 331

மேலே