தினம் ஒரு காதல் தாலாட்டு - ஜோடி சோக பாடல் 46 - = 143

“என் கவி பறவைக்கு சிறகொடிந்தது கண்ணே
நீ காதலித்து கழுத்தறுத்தப் பின்னே
முன்னைப்போல என் வாழ்வு இல்லை
முகம்மழிக்கும் நேரம்கூட உன் தொல்லை”

“மடலெழுத மை தொடும் மன்னா
உன் மரிக்கொழுந்து மாறிதானேப் போனா
என்ன செய்வேன் என் தலையில் பாரம்
ஆகையால் ஆகிவிட்டேன் அயலானுக்கு தாரம்”


நீலக்கடல் ஓரத்திலே ஓடம்
அதை ஓட்டுகின்ற மீனவர்கள் பாவம்

காதல் கடலில் நீந்துகின்ற நேரம்
அதை கடக்கின்ற காலம்வரை சோகம்

தீ மிதிப்பார் தீமை தீரும் என்று - ஆனால்
நாம் மிதித்தோம் காதல் வளரும் என்று

கொழுந்து வளந்ததய்யா காதல்தீ ஜீவாலைப்போல
இடையில் அணைந்ததய்யா ஜாதீ மழை பெய்ததால

ஓசைகளை எழுப்புகின்ற காற்று
நேற்றுவரை வீசியது எனைப்பாத்து
மகிழ்ந்த வண்ணம் இருந்தேன் பூத்து
உன்பிரிவால் இழந்தேன் எல்லாம் சேத்து


இந்த நாடக உலகம் போலி
அதில் ஆடுகின்றார் வாழ்கை கோலி
யாருக்கு யார் யார் சொந்தம் ?
அது இறைவன் போடுகின்ற ஒப்பந்தம் !

எழுதியவர் : சாய்மாறன் (23-Jun-16, 4:42 pm)
பார்வை : 126

மேலே