ரமழான் கவிதைகள் பக்கம் 03--முஹம்மத் ஸர்பான்

ரமழானின் வாசலில் மூன்று கதவுகள்
முதல் கதவை திறந்தவன் அருளை பெறுகிறான்
இரண்டாம் கதவை கடந்தவன் பாவமன்னிப்பை
வரமாக பெறுகிறான்; இறுதிக் கதவை அடைந்தவன்
நரகத்தின் வாயிலை விட்டும் சுவனத்தில் வாழ்கிறான்
உள்ளமெங்கும் இறைவனின் சிந்தை வெள்ளம்
கண்கள் ரெண்டிலும் இதயத்தின் பிரகாசம்
விண்மீன்கள் போல குவியும் அருளின் பாக்கியங்கள்
யாசிக்க ஒவ்வொரு அடிமையும் கையேந்தி நிற்கிறான்
உதிரும் சருகுகள் போல பாவங்களை விட்டு விடு
ஆனால் பூக்களை கிள்ளிப் பறிப்பதை போல
மகிமையான மாதத்தில் நன்மையை விட்டும் விலகாதே!
வீட்டின் சுவர்களை வண்ணங்களால் அலங்கரித்து
கூரையின் தூசுக்களை சுத்தப்படுத்தி எழிலாக்குவதை போல
உள்ளத்தின் அடித்தளத்தில் நன்மையான ரமழானின்
நிலையான தூண்களால் சுவர்க்கத்தில் விலைமதிப்பான
அமல்களால் மாளிகை கட்டு; -முடிந்தால் இன்னும் எதையவாது
சேர்த்துக் கொள்!
நன்மையெனும் தென்றலிடம் தீமையெனும் புயலும்
கைதியாகி சிறைவைக்கப்படுகிறது உன் நாவினில்
இனிப்பாக உச்சரிக்கப்படும் அல்குர்ஆன் வசனங்களில்...