ரமழான் கவிதைகள் பக்கம் 04--முஹம்மத் ஸர்பான்

சாக்கடை போல் நாற்றம் வீசிய
என்னுள்ளமும் சந்தனம் போல் மணக்கிறது
முடமாய்க் கிடந்த என் பாதங்களும்
பிறைநிலவோடு நன்மையை தேடி பயணிக்கிறது.
நபிகளார் பெயர் சொல்ல வார்த்தைகள் இனிக்கிறது
கசப்பான என் பாவங்களும் என்னை விட்டு விலகுகிறது
முட்களின் பாதையில் கால் வைத்து நடந்தாலும்
பூக்களை போன கானல் நீர் பாவங்களை விட்டு
விலகிடும் இலக்கணம் கற்றுத்தருகிறது ரமழான்
உள்ளங்களை சுத்தப்படுத்தும் எண்ணங்களும்
இருண்மைகளில் ஒளிவீசிடும் வண்ணங்களும்
பசியோடு கற்றுத்தருகிறது ஏழ்மையின் தாகம்
ரமழானெனும் பிறைவெளிச்சத்தின் பட்டறையில்
மண்ணிலிருந்து விண்நோக்கிய நபிகளார் மிஃராஜ்
விண்ணிலிருந்து மண்ணில் அருளிய அல்குர்ஆன்
வலிமையோடு போராடிய வெற்றியின் யுத்தங்கள்
தியாகத்தில் வாழ்ந்த இறைநேசர் வாழ்வையும்
உள்ளத்தில் மின்னல் போன்ற பிரகாசத்தால்
மீண்டும் விளக்கேற்றிச் செல்கிறது ரமழானெனும் தீபம்