வெண்டுறை பிடிமண் கையில் எடுத்த பிரம்மன்

பிடிமண் கையில் எடுத்த பிரம்மன்
கொடுக்க நினைக்கக் கனியில் வடிவில்
கண்ணில் தெரிந்த மரத்தில் உடனே
விரிந்தன பூக்கள் சிரித்து

எடுத்த கைமண் வீசி எறிந்து
கையைப் பிரம்மன் கழுவும் பொழுது
எஞ்சி இருந்த கொஞ்சம் மண்ணை
வீசியெறிந்தான் பூவை நோக்கி

விரிந்த பூவின் இதழ்கள் மூடி
கனியாய் மாறும் பருவத் திற்குள்
பிரம்மன் வீசிய துளிமண் கனியில்
விதையாய் நின்றது வெளியே

எழுதியவர் : (25-Jun-16, 2:46 pm)
பார்வை : 47

மேலே