அணைத்தால் மகிழ்கின்ற அம்மையார் - இரு விகற்ப நேரிசை வெண்பா

குளுகுளுவென் றேயிருக்கும் ஏ.சி உடலும்
கிளுகிளுப் பாக கிறங்கும் – விளைவுதான்
உண்மையில் மின்சாரக் கட்டண பில்லினைக்
கண்டால் அடிக்குமே ஷாக்! 1

ஈருபத்து நான்கு நிமிடத்திற்(கு) ஓர்யூனிட்
தேரும்; இரண்டு மணிக்காகும் – தோராயம்
ஐந்துயூனிட்; விட்டுவிட்டு ஏ.சி பயன்பாட்டை
ஏந்தலே நீபயன்ப டுத்து! 2

அணைத்தால் மகிழ்கின்ற அம்மையார் ஏ.சி
அணைத்தால் குமுறுவதே னோ?சொல் – கணைபோல
மின்சாரக் கட்டணத்தின் மீட்சியில்லா ஏற்றமே
துன்பந்தான் என்றே பகர்! 3

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (26-Jun-16, 11:04 am)
பார்வை : 76

மேலே