நேக்கா – சின்னேக்கா

நேக்கா, சின்னேக்கா
@@@@@@@@@@@@@@@
நேக்கா, சின்னேக்கா, எங்கடி போயிட்டீங்க?
@@@
வாசல்ல தாம் பாட்டி வெளையாடிட்டு இருந்தோம் பாட்டி. எம் பேரு ஸ்நேகா, எந் தங்கச்சி பேரு நேகா. ஏம் பாட்டி எங்க பேர தப்புப்

தப்பா உச்சரிச்சு எங்களை அசிங்கப்படுத்தறீங்க?
@@@@

ஆமாண்டியம்மா எதோ நம்ம தாய் மொழில நல்ல பேருங்களே இல்லாத மாதிரி கண்ட இந்திப் பேருங்கள உங்களுக்கு

வச்சிருக்கறாங்க உங்க அப்பனும் ஆத்தாளும்.
@@@@@@

இல்ல பாட்டி எங்க பள்ளிக்கூடத்திலெ கூட முக்காவாசி பிள்ளைங்க பேரெல்லாம் இந்திப் பேருங்க தாம் பாட்டி. இந்திப் பேர

வச்சிருக்கறதுதான் இப்ப நாகரிகம்.
@@@@

என்னால சரியாச் சொல்லமுடியாத நேக்கா, சின்னேக்கா –ங்கற பேருங்களுக்கு என்னடி அர்த்தம்?

!@!!!!

அந்தப் பேருங்கள எங்ககளுக்கு வச்ச எங்க அமமா அப்பாவுக்கே எங்க பேருங்களுக்கு என்ன அர்த்தம்னு தெரியாது. சினிமாவ்லே

வர்ற பேரத்தானே இப்பெல்லாம் பிள்ளைங்களுக்கு வைக்கறாங்க. எங்க பேரு தமிழ்ப் பேருங்களா இருந்தா எங்க தமிழாசிரியர்கூட

”என்ன உங்க பேரெல்லாம் உங்க கொள்ளுப்பாட்டி காலத்துப் பேருங்களா இருக்குதே”ன்னு சொல்லி எங்களக் கிண்டல் பண்ணுவாரு.

பாட்டி. காலம் மாறிப்போச்சுங்கறத நீங்க தெரியாமா இருக்கறீங்க.
@@@@

அடி போங்கடி நேக்கா, சின்னேக்கா. நம்ம தாய் மொழி உலகத்திலே தோன்றிய முதல் மொழின்னு உங்க அம்மாதான் எதோ ஒரு

புத்தகத்திலிருந்து படிச்சி சொன்னா. நம்ம தமிழு செம்மொழின்னும் சொன்னா. இந்திப் பேருஙகள பிள்ளைங்களுக்கு வச்சு நம்ம

செம்மொழிய கேவலப்படுத்தறது சரியா? சொல்லுங்கடி?
@@@
????!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
படம்: நன்றி: விகடன்.காம்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Neha (Hindi : नेहा) is a popular Hindi/Sanskrit Indian feminine given name, which means Love. It can also be translated to mean "rain" or "eyes."
Sneha (Hindi: स्नेहा) is a Hindu Indian popular feminine given name, which means"love".
ਸ੍ਨੇਹਾ; ಸ್ನೇಹಾ; ஸ்நேஹா; സ്നേഹാ; સ્નેહા; স্নেহা; స్నేహా = love, affection.
ನೇಹಾ; નેહા; நேஹா; నేహా; നേഹാ; ਨੇਹਾ; নেহা = Love, Rain
@@@
நன்றி: விக்கீபீடீயா & இண்டியாசைல்ட்நேம்ஸ்.காம்
***************************************************************************
நம் மொழி செம்மொழி
சீரிளமை குனறா
உலகின் முதன் மொழி!
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
பார்க்கவும் ஆர்வம் இருந்தால்:

ஆதிப் பெற்றோர் தமிழர்களே
கட்டுரை எண் = 257360.

எழுதியவர் : மலர் (26-Jun-16, 4:21 pm)
பார்வை : 85

சிறந்த நகைச்சுவைகள்

மேலே