முடியுமா
பறவையாய் நான்
பறந்தால்
பாசைகள் யாவும்
மாறிடுமா
பனமரச் சோலையில்
மனம் திறந்து
பறக்கதான் முடியுமா
கண்ட கனவை
நினைவாக வாழ்ந்திட
முடியுமா இந்த
உலகில்
அகிலம் எங்கும்
நான் பறந்து திரிந்தால் என்
உறவுகள் என்னை
மறந்து இருக்கதான் முடியுமா
மனம் மாறினாலும்
என் மண்வாசனை
மாறத்தான் முடியுமா
வாழ்ககை மாறினாலும்
உன் நம்பிக்கைக்கு
மாறத்தான் முடியுமா
உருவங்கள் இருந்தாலும்
மிருகங்களாய் மாறத்தான்
முடியுமா இந்த உடலுக்கு
கால்கள் நடந்து
காலங்கள் மறைவதை
உணரத்தான் முடியுமா
ஊமையாய் நான் இருந்து
உல்லாசமாய் பேசத்தான் முடியுமா
என் மீது காயத
வடுக்கலாய் இருந்தும்
முள் மீது விழுந்த
பட்டாடையாய் உள்ளோன்
முடியுமா
என எண்ணி.??
பொத்துவில் அஜ்மல்கான்
இலங்கை

