காதலுக்கு வயதேது
கல்லூரி வாழ்க்கை கழிந்தது
கதர்வேஷ்டியும் சட்டையுமாய்…
காதலை நான் உணரவில்லை
கன்னி எவளும் மனதிலில்லை
வேலை தேடிப் போராட்டம்…
வேலையே கிடைக்காத போது
வெட்டி பயலுக்கு காதலேது?
சுட்டி காட்டினர் உற்றார் உறவினர்..
கல்யாண வயதும் வந்தது..
கால் கட்டும் விழுந்தது…
காதல் மட்டும் மலரவில்லை
காதல் தேடலும் ஓயவில்லை..
நடுத்தர வயதில் இப்போது நான்
நாய்க்குணமாம் எனக்கு
இல்லத்தரசி சொல்கிறாள்
இவளிடம் எப்படி காதலை தேட ?
திடீரென்று ஒரு நாள்…
முதல் மரியாதை சிவாஜியின் குயில் போல
ஒரு இளங்குயில் என் காட்டுக்குள்ளே
குக்கூ எனக்கூவியது…என்
காதல் நெஞ்சும் படபடத்தது..
குயிலின் அன்பில் கறைந்தேன்
என் வயதையும் மறந்தேன்..
குயிலும் கூவியது ‘காதலுக்கு வயதேது’
காதலை உணர்த்திய குயிலுக்கு நன்றி !
அந்த கடவுளுக்கும் நன்றி !!!!