காதல் முதல் கல்லறை வரை
நான் உயிருடன் இருக்கும் பொழுது
மெளனம் கொண்ட அவளின் இதழ்
நான் இறந்த பின்
என்னுடலைக் கண்டு
மெளன அஞ்சலி செலுத்தாமல்...
எதற்காக இன்று புலம்புகிறது?!
உடன் இருக்கும் பொழுது அறிந்திருந்தால்
என் அன்பை...!
இன்று நான் இறந்திருக்க மாட்டேன்!
இறந்த பின்னே அறிந்தென்ன செய்ய
மண்ணில் மறைந்த பின்னே
தேடுவதேன் என்னுறவை?
எனினும் ஏனோ ?
இன்னும் எழுப்பவில்லை
ஓர் கல்லறை...!
மெளனத்தால் புதைத்து விட்டு
கண்ணீர் வடிக்கிறாள் இன்று!